சமூக மக்களாட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சமூக மக்களாட்சி (Social democracy) என்பது ஒரு அரசியல், சமூக மற்றும் பொருளாதார கருத்தியலாகும், இது தாராளவாத மக்களாட்சி அரசியல் மற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டமைப்பிற்குள் சமூக நீதியை மேம்படுத்துவதற்கான, பொருளாதார மற்றும் சமூக இடையீடுகளை ஆதரிக்கும் முறையாகும். சமூக மக்களாட்சியை நிறைவேற்ற தேவைப்படும் நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் ஈடுபாட்டுடன் கூடிய பிரதிநிதித்துவ மற்றும் பங்கேற்பு மக்களாட்சி, பொது நலனுக்காக வருமான மறுபங்கீடு மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலத்தை நாடும் அரசு விதிகள் இவற்றை உள்ளடக்கியதாகும்.[1][2][3] எனவே, சமூக மக்களாட்சியானது, சமத்துவம், ஒற்றுமை, இன்னும் விரிந்த பொருளுடைய மக்களாட்சி போன்ற நல்ல விளைவுகளுக்கு வழிவகுக்கும் முதலாளித்துவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இது வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பிரபலமாகி வரும் சமூக பொருளாதாரக் கொள்கைகளோடு, குறிப்பாக நோர்டிக் நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பின்பற்றப்பட்ட நோர்டிக் மாதிரி கருத்தியலோடு தொடர்புடையதாக இருக்கிறது.[4][5]

சமூக மக்களாட்சி ஒரு அரசியல் கருத்தியலாக உருவாகியுள்ளது. அது மரபு வழி மார்க்சிசத்துடன் தொடர்புடைய மாற்றத்திற்கு எதிரான புரட்சிகர அணுகுமுறைக்கு மாறாக, நிறுவப்பட்ட அரசியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு ஒரு பரிணாம வளர்ச்சி போன்ற அமைதியான மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.[6] மேற்கு ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய சகாப்தம், சமூக மக்களாட்சி கட்சிகள் சோவியத் ஒன்றியத்தின் தற்போதைய நிலைக்குத் தள்ளிய ஸ்டாலினிச அரசியல் பொருளாதார மாதிரியை புறந்தள்ளி, சோசலிசத்திற்கான ஒரு மாற்று பாதையாக அல்லது முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையில் சமரசத்திற்கு உட்படுத்தப்பட்ட மாதிரியைத் தேர்ந்தெடுத்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.[7] இந்தக் காலகட்டத்தில், சமூக மக்களாட்சியாளர்கள் தனியார் சொத்துரிமைகளின் பங்கினை அதிக அளவில் ஆதாரமாகக் கொண்ட கலப்பு பொருளாதாரக் கொள்கையைத் தழுவியதோடு, பொதுமக்களின் உரிமையின் கீழ் அத்தியாவசிய பயன்பாடுகள் மற்றும் பொது சேவைகளை மட்டுமே கொணர்ந்தனர். இதன் விளைவாக, சமூக மக்களாட்சியானது கெயினியன் பொருளாதாரம், அரசு தலையீடு மற்றும் மக்கள் நலம் நாடும் அரசுடன் தொடர்புடையதாக இருந்தது. அதே நேரத்தில் முதலாளித்துவ முறையை மாற்றுவதற்கான முன் இலக்கை கைவிட்டு(சந்தைக் காரணிகள், தனியார் சொத்து மற்றும் ஊதிய உழைப்பு)[4] பண்பு ரீதியாக வேறுபட்ட சோசலிச பொருளாதார அமைப்பின் வழியாக இலக்கை அடைய முயற்சியில் இருந்தது.[8][9][10]

நவீன சமூக மக்களாட்சியானது, வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகக் குழுக்கள், வறுமை ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட முதியோர், குழந்தை பராமரிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழிலாளர்கள் இழப்பீடு போன்றவற்றிற்கு முன்னுரிமை, உலகளாவிய அணுகத்தக்க பொது சேவைகளுக்கான ஆதரவு உட்பட ஈடுபாடுடைய கொள்கைகளால் அடையாளப்படுத்தப்படுகிறது.[11] சமூக மக்களாட்சி இயக்கமானது, தொழிலாளர் இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களோடும் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளதுடன், தொழிலாளர்களுடன் இணைந்து உரிமைகளை வாதாடி பெற்றுத்தருவதற்கும் மற்றும் மக்களாட்சித் தத்துவத்தை முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் நீட்டிப்பதற்கும், அரசியலுக்கு அப்பாற்பட்ட விதத்தில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு வேலையளிப்போர். பணியாளர்கள் மற்றும் இதர பொருளாதார பங்குதாரர்கள் ஒருமித்த இலக்கை நோக்கி பொருளாதாரக் கோளத்தில் பயணிக்கத்தக்க வகையில் ஆதரவளிக்கிறது.[12]

மூன்றாவது வழியானது, பொருளாதார தாராளமயத்தையும், சமூக மக்களாட்சிக் கொள்கைகளுடன் மேம்போக்காக இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள, 1990 களில் உருவாக்கப்பட்ட, சில நேரங்களில் சமூக மக்களாட்சி இயக்கங்களோடு தொடர்புடைய ஒரு கருத்தியலாகும். ஆனால், சில பகுப்பாய்வாளர்கள், மூன்றாவது வழியை ஒரு புதிய, திறன்மிக்க தாராளமய இயக்கம் என அடையாளப்படுத்துகிறார்கள். [13]


Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads