சர்வதேச ஆசிரியர் நாள்

From Wikipedia, the free encyclopedia

சர்வதேச ஆசிரியர் நாள்
Remove ads

சர்வதேச ஆசிரியர் நாள் (World Teachers' Day) உலக ஆசிரியர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவுகூரும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. [1] [2] சர்வதேச ஆசிரியர் நாள் "உலகின் கல்வியாளர்களைப் பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்" ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் ஆசிரியர்களுக்கான சிக்கல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. [3]

விரைவான உண்மைகள் சர்வதேச ஆசிரியர் நாள், கடைப்பிடிப்போர் ...
Remove ads

கொண்டாட்டம்

சர்வதேச ஆசிரியர் நாளினைக் கொண்டாடுவதற்காக, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு (ஈஐ) ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. அதன்மூலம் ஆசிரியர்களைப் பற்றிய சிறந்த புரிதலையும், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் அவர்கள் வகிக்கும் பங்கையும் உலகிற்கு வழங்க உதவுகிறது.[4] இந்த நோக்கத்தை அடைய அந்த அமைப்பு ஊடக நிறுவனங்கள் போன்ற தனியார் துறையுடன் இணைந்து செயல்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள்களில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது. உதாரணமாக, "ஆசிரியர்களை மேம்படுத்துதல்" என்பது 2017 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள். உயர்கல்வி கற்பித்தல் பணியாளர்களின் நிலை தொடர்பான 1997 யுனெஸ்கோ பரிந்துரையின் 20 வது ஆண்டின் நிறைவை உலக ஆசிரியர் தினம் நினைவுகூறுவதற்காக இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது. [5]

2018 ஆம் ஆண்டு யுனெஸ்கோ "கல்விக்கான உரிமை என்பது தகுதியான ஆசிரியருக்கான உரிமை" எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. [6] இது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (1948) 70 வது ஆண்டு நிறைவை நினைவுகூர்கிறது மற்றும் பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல் கல்விக்கான உரிமையை உணர முடியாது என்பதை நினைவூட்டுகிறது.

Remove ads

மேலும் காண்க

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads