சாச்சி 420
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாச்சி 420 (ஆங்கிலம்:The Trickster Aunt/Chachi 420) இது ஓர் இந்திய இந்தி மொழித் திரைப்படமாகும். கமல்ஹாசன் இயக்கத்தில் டிசம்பர் 19, 1997 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தபூ, நாசர், அம்ரீஷ் புரி, ஓம் பூரி, மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் நவம்பர் 10, 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மற்றும் மீனா நடித்த அவ்வை சண்முகி என்னும் தமிழ் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
Remove ads
உருவாக்கம்
முதலில் இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு அவ்வை சண்முகி என்ற தலைப்பில் தமிழிலும், பாமனே சத்யபாமனே என தெலுங்கிலும் வெளியானது. பின்னர் 1997 ஆம் ஆண்டு இந்தியில் சாச்சி 420 என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.[1] மேலும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் மகளும் நடிகையுமான சுருதி ஹாசன் சாகோ கோரி எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.[2]
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads