சாரணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாரணர் என்போர் சாரணியத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் ஆவர். இவர்கள் பொதுவாக 10 தொடக்கம் 18 வயதுப் பிரிவினராகவே காணப்படுவர். வயதின் அடிப்படையில் கனிஷ்ட, சிரேஷ்ட எனும் இரு வகையாக இவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். 20 முதல் 40 வரையான சாரணர்களை உள்ளடக்கிய குழு, துருப்பு (Troop) எனவும் அத்துருப்புக்களில் 6 தொடக்கம் 8 வரையான உறுப்பினர்களைக் கொண்ட பிரிவு அணி எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு துருப்பிலும் சாரணத் தலைவர்கள் காணப்படுவர். சாரண செயற்பாடுகள் துருப்பு அல்லது அணி ரீதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
சாரணர்கள் பொதுவாக, சாரணர், கடற்காரணர் வான் சாரணர் என மூன்று வகைப்படுத்தப்படுகின்றனர். சாரணர்களின் இயக்கம் 1907இல் பேடன் பவல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.[1][2][3][4]
Remove ads
உதவும் துறவிகள்
- சாரணன் ஒருவன் நிலம், நீர், வானம் ஆகிய எங்கும் இயங்க வல்லவர் என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.[5] இந்தச் சாரணன் சோழ வேந்தன் நெடுமுடிக் கிள்ளிக்கு உதவியிருக்கிறான்.
- சாரணர் நல்ல அறிவுரைகளை வழங்குவர் என்று கவுந்தி அடிகள் குறிப்பிடுகிறார்.[6][7]
- சாரணர் அறநெறிகளைக் கூறுபவர்.[8]
- கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் திருவரங்கத்தில் தங்கியிருந்தபோது "பண்டைய வினைகள் நீங்கி நலம் பெறுவாயாக" என்று கவுந்தி அடிகளையே வாழ்த்தும் அளவுக்குச் சாரணர் சிறப்புப் பெற்றவர்கள். அவர்கள் சமண முனிவர் கூறிய நோன்பிலிருந்து பிறழாதவர்கள்.[9]
- புகார் நகரத்து விழாக்காலங்களில் சாரணர் வருவர். அங்கு உலக நோன்பிகள் இட்டு வைத்திருக்கும் சிலாதலம் என்னும் இருப்பிடத்தில் தங்கிச் செல்வது வழக்கம்.[10]
- 18 தேவ கணங்களில் ஒருவர் சாரணர் என்று "மூவறு கணங்கள்" என வரும் சிலப்பதிகாரத் தொடருக்கு உரை எழுதும் பழைய உரை ஒன்று சாரணரை ஒரு கணத்தவர் என்று குறிப்பிடுகிறது.[11][12]
- நாகமலைத் தீவில் சாரணர் திரிந்த செய்தியையும் மணிமேகலை நூல் குறிப்பிஇடுகிறது.[13]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads