சிட்டகாங் மாவட்டம்

வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சிட்டகாங் மாவட்டம்
Remove ads

'சிட்டகாங் மாவட்டம் (சட்டோகிராம் மாவட்டம்) (Chittagong District) now Chattogram (Bengali: চট্টগ্রাম জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிட்டகாங் நகரம் ஒரு மாநகராட்சியும் ஆகும். இம்மாவட்டத்தின் பெரும் பகுதி வங்காள விரிகுடாவின் கிழக்கிலும், சிறு பகுதி மேற்கிலும் அமைந்துள்ளது.

Thumb
வங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தின் /சட்டோகிராம் மாவட்டத்தின் அமைவிடம்

இயற்கை துறைமுகமான சிட்டகாங் துறைமுகம், வங்காளதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும்.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

சிட்டகாங் மாவட்டம் பதினான்கு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இம்மாவட்டம் இருபத்தி ஆறு காவல் நிலையங்களும், 1,267 கிராமங்களும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

5282.92 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சிட்டகாங் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 76,16,352 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 38,38,854 ஆகவும், பெண்கள் 37,77,498 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,442 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 58.9% ஆக உள்ளது.[2]

Remove ads

பொருளாதாரம்

வேளாண்மை, மீன் பிடித்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் ஆகும்.

சமயங்கள்

சிட்டகாங் மாவட்டத்தில் 13148 பள்ளிவாசல்களும், 1025 இந்துக் கோயில்களும், 535 பௌத்த விகாரங்களும் மற்றும் 192 கிறித்தவ தேவாலயங்களும் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads