சிந்தல்பாடி சிவனீசுவரமுடையார் கோயில்

தமிழ்நாட்டின் சிந்தல்பாடியில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிந்தல்பாடி சிவனீசுவரமுடையார் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தரும்புரியில் இருந்து தென்கரைக்கோட்டை செல்லும் சாலையில் 28 கி.மீ தொலைவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தல்பாடி என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.

கோயிலின் பழமை

இக்கோயிலின் பழமையான கல்வெட்டு என்றால் அது 12 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டாகும். இதைக்கொண்டு பார்க்கும்போது இக்கோயில் 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியவருகிறது. [1]

கோயிலமைப்பு

இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது., தெற்கிலும் மேற்கிலும் என இருவாயிலகள் உள்ளன. இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்மன் கோயில் சிவன் கோயிலுக்கு வலப்புரமாக திருச்சுற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. பரிவார தெய்வங்களாக காலபைரவர், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளனர். கோயிலின் விமானம் இருதள விமானமாகும். இக்கோயிலில் பழமைவாய்ததாக இருப்பினும் நாள் வழிபாடுகள் இல்லாமல் அர்சகரால் வாரவழிபாடு மட்டுமே செய்யப்படுகிறது.

Remove ads

மேறகோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads