சிந்து (சிற்றிலக்கியம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செய்யுள் இலக்கணத்தில் ‘சிந்தியல் வெண்பா’ என்பது மூன்று அடிகளை உடைய வெண்பாப் பாடல். கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்பாக வரும் ‘சிந்து’ பாடல் ஒருவகை இசைப்பாடல்.
திருவாழி பரப்பினான் கூத்தன் என்னும் புலவர் பாடிய சிந்து நூல் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சிந்து இசைத்தமிழ்ப் பாடல்
சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. எடுப்பு 1, தொடுப்பு 1, உறுப்பு 3 என்று 5 உறுப்புகளைக் கொண்டது ‘சிந்து’ பாடல். (அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும்.)
காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து என்னும் சிற்றிலக்கியத்தில் பலராலும் போற்றப்படும் நூலாகும்.
வள்ளலார்
வள்ளலார் சிந்து இசைப்பாடல்கள் பல பாடியுள்ளார். எடுத்துக்காட்டு:
- அருவே திருவே அறிவே செறிவே
- அதுவே இதுவே அடியே முடியே
- அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. [1]
- 1.
- தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
- சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
- 2.
- சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
- சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு. [2]
- 1.
- போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
- ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.
- 2.
- நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
- பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம். [3]
Remove ads
கருவிநூல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads