சிபெக்ட்ரம் பேரங்காடி
இந்தியாவில் உள்ள கட்டடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிபெக்ட்ரம் பேரங்காடி (Spectrum Mall (Chennai)) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை நகரத்திலுள்ள பெரம்பூர் புறநகரில் அமைந்துள்ளது. சிபெக்ட்ரம் மால், கிராண்டு வீனசு மால் என்ற பெயர்களாலும் இப்பேரங்காடி அறியப்படுகிறது. வடசென்னையில் தோன்றிய முதலாவது பேரங்காடி என்ற சிறப்புக்குரிய பேரங்காடியாகத் திகழ்கிறது.[1] பெரம்பூரில் உள்ள பேப்பர் மில்சு சாலையில் உள்ள முன்னாள் வீனசு திரையரங்கம் இருந்த இடத்தில் இந்த பேரங்காடி உருவாக்கப்பட்டது.[2] 160,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு நிலை சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஐந்து திரைகள் கொண்ட பல்கூட்டு திரையரங்குகளுடன் பரவியுள்ளது.[2] இங்குள்ள நிறுத்தங்களில் 200 சிற்றுந்துகளும் 800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய இரண்டு நிலை அடித்தள வாகன நிறுத்துமிட வசதியைக் கொண்டுள்ளது.[2][3] இந்த பேரங்காடி கங்கா அறக்கட்டளை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது.[4] பிக் பசார் இதன் முக்கிய கடையாக இடம்பெற்றுள்ளது. பேரங்காடி 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிராண்டு வீனசு மால் எனத் தொடங்கப்பட்டது. பின்னர் இது சிபெக்ட்ரம் மால் என மறுபெயரிடப்பட்டது. அதன் பி.வி.ஆர் திரையரங்குகள் பல்கூட்டு திரைகள் கொண்ட திரையரங்கமாக 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.[3][5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads