சில்பராமம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சில்பராமம் (Shilparamam) என்பது கலை மற்றும் கைவினை கிராமமாகும். இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின், மாதபூரில் அமைந்துள்ளது.[1]
பாரம்பரிய கைவினைப்பொருட்களைப் பாதுகாப்பதற்கான சூழலை உருவாக்கும் யோசனையுடன் இந்த கிராமம் உருவானது. ஆண்டு முழுவதும் விழாக்களும் நடைபெறுகிறது.
ஐதராபாத்து நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கிராமம், ஒரு கைவினைக் கிராமமாக 1992ஆம் ஆண்டில் உருவானது. 65 ஏக்கர்கள் (260,000 m2) பரந்து விரிந்துள்ளது. இந்தியாவின் நவீன மைய நகரமான இது பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அழகிய சூழலை வழங்குகிறது. இந்திய கலை மற்றும் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் மாநில அரசு இந்த தளத்தை நிறுவியது.[2]
Remove ads
சில்பராமத்தில் ஈர்ப்புகள்

கிராமிய அருங்காட்சியகம்
மரங்களால் சூழப்பட்ட கிராமப்புற அருங்காட்சியகம் வழக்கமான இந்திய கிராமத்தின் மாதிரி சித்தரிப்பாகும். சுடப்பட்ட களிமண் மற்றும் கூரைகளால் கட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட குடிசைகள், கிராமப்புற மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முறைகளையும் பல்வேறு கைவினைஞர்களின் வாழ்க்கையையும் சித்தரிக்கின்றன. நகரவாசிகளுக்கும் இதற்கு முன்பு ஒரு கிராமத்திற்குச் செல்லாதவர்களுக்கும் இது கிராமப்புற வாழ்க்கைக்கு ஒரு சாளரத்தை வழங்குகிறது. கிராமப்புற கைவினைஞர்களின் அன்றாட நடவடிக்கைகளை சித்தரிக்கும் சிற்பங்கள் மற்றும் வாழ்க்கை அளவு மாதிரிகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

Remove ads
புகைப்படத் தொகுப்பு

- சில்பராமத்தில் இரு சக்கர வாகனங்களின் மாதிரிகள் காட்டப்பட்டுள்ளது
- சில்பராமத்தில் ஒரு கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்
- சில்பராமத்தில் காட்டப்படும் தெய்வங்களின் கைவினைப் பொருட்கள் மாதிரிகள்
- சில்பராமத்தில் வண்ண களிமண் மாதிரிகள் விற்பனைக்கு உள்ளன
- சில்பராமத்தில் புத்தரின் களிமண் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
- சில்பராம் நெசவாளர்கள் களிமண் மாதிரிகள்
- சில்பராமத்தில் கைப்பைகள்
- சில்பராமத்தில் பாறைப் பூங்கா
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
External links
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads