சீசியம் புரோமைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீசியம் புரோமைடு (Caesium bromide) என்பது CsBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சீசியமும் புரோமினும் சேர்ந்த வேதிச் சேர்மம் ஆகும். சீசியம் குளோரைடு வகை கனசதுர அமைப்பை ஒத்த எளிய கனசதுர படிக அமைப்பை சீசியம் புரோமைடு பெற்றிருக்கிறது. இவ்வமைப்பு Pm3m இடக்குழு வகையையும் அணிக்கோவை மதிப்பு a = 0.42953 நா.மீ. Cs+ மற்றும் Br− அயனிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 0.37198 நா.மீ ஆகும். எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்பட்டால் இதனுடைய கொல்லும் அளவு 1400 மி.கி/ கி.கி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. [2]
Remove ads
தொகுப்பு முறையில் தயாரிப்பு
பின்வரும் வேதி வினைகள் வழியாக சீசியம் புரோமைடைத் தயாரிக்கலாம்.
நடுநிலையாக்கல் வினை
CsOH (நீர்த்த) + HBr (நீர்த்த) → CsBr (நீர்த்த) + H2O (நீர்மம்) Cs2(CO3) (நீர்த்த) + 2 HBr (நீர்த்த) → 2 CsBr (நீர்த்த) + H2O (நீர்மம்) + CO2 (வாயு)
• நேரடித் தொகுப்பு வினை:
2 Cs (திண்மம்) + Br2 (வாயு) → 2 CsBr (திண்மம்)
சீசியம் உலோகம், உப்பீனிகளுடன் நேரடியாக வினைபுரியும் போது அதி தீவிரமாக வினைபுரிகிறது என்பதாலும் அதிக விலைமதிப்பு கொண்டது என்பதாலும் பெரும்பாலும் இம்முறையில் சீசியம் புரோமைடு தயாரிக்கப்படுவதில்லை.
Remove ads
பயன்கள்
ஒளியியலில் சில சமயங்களில் நிறமாலை ஒளியளவியில், ஒளிக்கற்றைப் பிரிப்பானாக சீசியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
இவற்றையும் காணக
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
