சீன வங்கிக் கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீன வங்கிக் கோபுரம் (சுருக்கம்: BOC கோபுரம்) இது ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். இதன் அமைவிடம் ஹொங்கொங் தீவின் , சென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டத்தில் இலக்கம்-1 கார்டன் வீதி, சென்ட்ரல் நகரில் உள்ளது. உலகில் அதிக வானளாவிகளைக் கொண்ட நாடாக ஹொங்கொங்காக விளங்கியப்போதும், ஹொங்கொங் கட்டிக்கலையின் தனித்துவமானச் சின்னமாக இந்த சீன வங்கிக் கோபுரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஹொங்கொங்கின் அடையாளச் சின்னம் (Hong Kong's icon) என்றும் குறிப்பிடுவர்.
Remove ads
கட்டட வடிவமைப்பு
இந்த கட்டடத்தை வடிவமைத்த கட்டடக் கலைஞரின் பெயர் யெஹ் மிங் பெய் (Ieoh Ming Pei) எனும் அமெரிக்கச் சீனராகும். தனது கட்டட வடிவமைப்புத் துறையில் பல விருதுகளையும் இவர் பெற்றவராவர். இவரை சுருக்கமாக இவரின் பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டு ஐ. எம். பெய்) என அழைக்கப்படுகிறார். இக்கட்டடத்தின் உயரம் (1,033.5 அடிகள்) 315 மீட்டராகும். கட்டடத்தின் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கூர்முனைகளின் உயரத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இதன் முழு உயரம் (1,205.4 அடிகள்) 367.4 மீட்டராகும். இக்கட்டடம் 72 மாடிகளை கொண்டுள்ளது. இக்கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட காலகட்டத்தில் (1989 - 1992) ஹொங்கொங்கின் அதிக உயரமான கட்டடமாக இது விளங்கியது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே அதிக உயரமான கட்டமாகவும் இதுவே விளங்கியுள்ளது. தற்போது இதனை விடவும் உயரமான கட்டடங்கள் பல ஹொங்கொங்கில் எழுந்துள்ளன. இருப்பினும் இக்கட்டடத்தின் வடிவமைப்பு இதன் தனித்துவத்தை க் காட்டி நிமிர்ந்து நிற்கிறது. கட்டடத்தைச் சுழ பசுமையான மரங்களும், குறும் நீர்வீழ்ச்சிகளும், பூங்காவுமாக காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சீன வங்கி கோபுரம் குறித்து, சீனப் பாரம்பரியக் கட்டடக்கலை பெங் சுயி நிபுணர்கள் இதன் கூரிய விளிம்புகள் குறித்து விமர்சித்துள்ளனர். இந்த விளிம்புகள் இரவு நேரத்தில் வெள்ளை மின் கோடுகளாக மிளிரும்.
Remove ads
வரலாறு
இக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலப்பரப்பு, பிரித்தானியரினால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்றான முறே இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடமாகும். இந்த முறே இல்லத்தின் ஒவ்வொரு கற்களாகப் பெயர்த்தெடுத்து, அவற்றை அப்படியே கடல் வழியூடாக கப்பலில் ஏற்றிச்சென்று ஹொங்கொங் தீவின் கிழக்கில், ஸ்டேன்லி எனும் இடத்தில் அதன் வடிவமைப்போ, கட்டிடச் சிதைவோ இல்லாமல் அப்படியே மீளெழுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த முறே இல்லம் அமைந்திருந்த நிலப்பரப்பில் 1985 ஆம் ஆண்டு சீன வங்கிக் கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பம் ஆகின. கட்டிட நிர்மானப் பணிகள் நிறைவடைந்து, 1990 ஆம் ஆண்டு, மே மாதம் 7 ஆம் திகதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
Remove ads
கட்டிட மாடிகள்
72 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் அடிப்பகுதியில் உள்ள 19 மாடிகள் வரையிலான பகுதியும், கட்டிடத்தின் முனைப்பகுதியில் 4 மாடிகளையும் சீன வங்கியின் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஏனைய மாடிகள் அனைத்தும் பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
துணை நூல்கள்
- மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads