சீன விண்வெளித் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏவுகணை ஏவுதல், செயற்கைக் கோள்களை ஏவுதல், விண்வெளிப் பயணம், விண்வெளிப் போரியல், விண்வெளிக் குடியிருப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை, கட்டமைப்புகளை, திட்டங்களை விருத்தி செய்யும் நிறைவேற்றும் இலக்கோடு செயலாற்றும் சீனா அரசின் முன்னெடுப்பே சீன விண்வெளித் திட்டம் ஆகும். 2000 களில் உருசியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் அடுத்தபடியாக சீன விண்வெளித் திட்டம் மூன்றாம் நிலையில் இருக்கிறது. சீனா அக்டோபர் 15, 2003 சென்ஷோ திட்டம் 5 மூலம் மனித விண்வெளிப்பறப்பு நிகழ்தி உலகில் மூன்றாம் விண்வெளிச் சக்தியாக தன்னை நிலைநிறுத்தியது. சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் செல்லும் திட்டங்களும் நடப்பில் உள்ளன.[1][2][3]
Remove ads
வரலாறு
சீனாவிலேயே முதன்முதலாக வெடிமருந்து, ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விருத்தி பெற்றன. நவீன விண்வெளித் திட்டங்களின் திருப்பு முனையாக சோவியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் அமைந்தது. இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
சீனாவின் விள்வெளித் திட்டம் அதன் ஏவுகணைத் திட்டத்தில் இருந்து தோற்றம் பெற்றது. 1950களில் ஐக்கிய அமெரிக்காவின் அணு ஏவுகணைத் தாக்குதலுக்கு அஞ்சிய சீனா, Qian Xueshen தலைமையின் கீழ் அதன் முதல் ballistic missile program தொடங்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads