சுக்மா தாக்குதல் 2017
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் அங்கமான நக்சல்கள் 2017 ஏப்ரல் 24 அன்று இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் 26 இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் அடக்கம். சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் சிந்த்தாகுபா பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது.[3][4][5][6]
Remove ads
தாக்குதல்
2017 ஏப்ரல் 24 அன்று மதியம் 1:00 மணிக்கு கிட்டத்தட்ட 300 நக்சல்கள் ஏகே-47 மற்றும் இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி ஏந்தியவாறு 99 பேர் கொண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.[7]
இழப்புகள்
300 நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியப் பாதுகாப்புப் படையினர் கொல்லபட்டனர் ஏழு பாதுகாப்புப் படையினரைக் காணவில்லை.[8] மாயமானோரை உலங்கு வானூர்தி மூலம் தேடிவருகின்றனர். காயமடைந்த ஆறு இந்தியப் படையினர் ராய்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads