சுக்ராம்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பண்டிட் சுக்ராம் (Pandit Sukh Ram, 27 சூலை 1927 - 11 மே 2022) இந்திய தேசிய காங்கிரசு அரசில் பணியாற்றிய முன்னாள் நடுவண் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆவார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்பகுதியிலிருந்து ஐந்து முறை சட்டப்பேரவை தேர்தல்களிலும் மூன்று முறை மக்களவைத் தேர்தல்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைகள்

இவரது அலுவல்முறை வசிப்பிடத்திலிருந்து 1996ஆம் ஆண்டில் நடுவண் புலனாய்வுச் செயலகம் 3.6 கோடிகள் பணமாக பைகளிலும் கைப்பெட்டிகளிலும் பதுக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தது. இந்தப் பணம் தொலைத்தொடர்பு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்குவதில் இவர் செய்த முறைகேடுகளுக்காக கையூட்டாக வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டியது. 2002இல் இந்த வழக்கில் தில்லி நீதிமன்றம் மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.[1]

1996ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு கம்பிவடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளில் கையூட்டு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நவம்பர் 18, 2011இல் தீர்ப்பு வழங்கிய தில்லி நடுவண் புலனாய்வு நீதிமன்றம் இவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.[2]

Remove ads

மறைவு

2022 மே 11 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 94 ஆவது வயதில் டெல்லியில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads