சுவாமி விவேகானந்தா விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுவாமி விவேகானந்தா விளையாட்டரங்கம் (Swami Vivekananda Stadium) இந்தியாவின் திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் உள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ஆகும். இந்த மைதானத்தில் 8,000 நபர்கள் அமரும் வசதியுடையது. இந்த விளையாட்டரங்கம் நகர மையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் சுவாமி விவேகானந்தா விளையாட்டரங்கம் Swami Vivekananda Stadium, விவேகானந்தா விளையாட்டரங்கம் ...

வடகிழக்கு இந்தியாவில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் முழு அரங்கமும் மிகவும் நவீனமயமாக்கப்பட்ட அரங்கமாக உள்ளது. இந்த மைதானத்தின் பரப்பளவு 7350 சதுர மீட்டர். இங்குப் பத்திரிகையாளர் அரங்கம், பிரமாண்டமான காலரியும் உள்ளது. இந்த அரங்கம் அமைக்க அரசு ரூ.9 கோடியைச் செலவு செய்துள்ளது.

இந்த அரங்கில் பல அரசியல் பேரணிகளும் நடைபெற்றுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பேரணியை நடத்தினார். [2] [3]

மகாராஜா பிர் பிக்ராம் கல்லூரி விளையாட்டரங்கம், பாதர்காட் விளையாட்டரங்கம் முதலியவற்றைத் தொடர்ந்து திரிபுராவில் உள்ள மூன்றாவது முக்கிய மைதானமாக இந்த அரங்கம் உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads