சூச்சிபாரா அருவி

கேரளத்தில் உள்ள ஒரு அருவி From Wikipedia, the free encyclopedia

சூச்சிபாரா அருவிmap
Remove ads

சூச்சிப்பாரா அருவி (Soochipara Falls) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள வயநாட்டின் வெல்லாரிமலையில் உள்ள ஒரு மூன்றடுக்கு நீர்வீழ்ச்சியாகும். இதை செண்டினல் பாறை நீர்வீழ்ச்சி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இலையுதிர், பசுமைமாறா, மலைக் காடுகள் போன்றவை இந்நீர்வீழ்ச்சியைச் சூழ்ந்துள்ளன. சூச்சி என்பது ஊசி என்றும் பாரா என்றால் பாறை என்றும் பொருள்படும் என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேப்பாடியிலிருந்து சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 15 முதல் 20 நிமிடப் பயணத் தொலைவில் எண்ணற்ற வயநாடு தேயிலைத் தோட்ட கண்ணுக்கினிய காட்சிகள் பார்வைக்கு தென்படும்[1] . 200 மீட்டர் உயரமுள்ள சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி செங்குத்தான பாறையாய் நின்று மலையேற்றத்திற்கு பயனாகிறது[2]. அருவியிலிருந்து குதிக்கும் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு உரிய சேராம்பாடிக்கு அருகில் கேரளாவின் வெலரிமலைக் குன்றை கடந்து சூலிக்கா ஆற்றில் கலக்கிறது[3]. இந்த ஆறு சாலியார் ஆறு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது.

Thumb
பயணச்சீட்டு கொடுக்குமிடம்
விரைவான உண்மைகள் சூச்சிப்பாரா அருவி Soochipara Falls, அமைவிடம் ...

மக்கள் அருவியை அடைந்தவுடன், நுழைவாயிலில் ஒரு பாதுகாப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் நெகிழிப்பொருட்களை அருவிக்குக் கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. நுழைவாயிலில் தொடங்கி அருவி வரை செல்ல 10 அல்லது 15 நிமிடங்கள் பிடிக்கும். கோடைகாலத்தில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் பாறையை அடைவது எளிதாக இருக்கும்.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads