சூரசம்ஹாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரசம்ஹாரம் (Surasamharam) என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும்.[1] சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்நிகழ்வினை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.
Remove ads
தொன்மம்

காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் நெற்றியிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் உருவாயின. அதனை வாயுபகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்த்தனர். பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேல் பெற்ற முருகன் சூரபத்மனை போரில் அழித்தான்.[2] இந்தப் போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தனர்.[3]
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads