செசுகியுவாக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செசுகியுவாக்சைடு (Sesquioxide) என்பது மூன்று ஆக்சிசன் அணுக்கள் வேறு தனிமத்தின் இரண்டு அணுக்களுடன் அல்லது (தனி உறுப்புகளுடன்) சேர்ந்துள்ள ஒரு ஆக்சைடு வகையாகும். உதாரணமாக அலுமினியம் ஆக்சைடு ஒரு செசுகியுவாக்சைடாகும் (Al2O3). பல செசுகியுவாக்சைடுகளில் +3 ஆக்சிசனேற்ற நிலையில் தனிமமும் ஆக்சைடு அயனியும் இடம்பெற்றுள்ளன. உதாரணம் Al2O3, La2O3. ஆல்கலி உலோக செசுகியுவாக்சைடுகள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். இவை பெராக்சைடுகளையும் (O2−2) மிகையாக்சைடுகளையும் (O−2) கொண்டிருக்கும். இரும்பு, அலுமினியத்தின் செசுகியுவாக்சைடுகள் மண்ணில் காணப்படுகின்றன [1].
செசுகியு ஆக்சிசனேற்றம் என்ற சொல்லாக்கம் செசுகியுவாக்சைடை உருவாக்குதல் என்று பொருளைக் குறிக்கும். 1976 ஆம் ஆண்டு முதல் யோசெபா எய்பெட்சு பைமெயின் அகராதியில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சுபோர்டு அகராதியிலும் செசுகியு ஆக்சிசனேற்றம், செசுகியு ஆக்சிசனமேற்றப்பட்ட என்ற சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன [2].
Remove ads
செசுகியுவாக்சைடுகள்
[[B2O3]]
[[N2O3]]
[[Al2O3]]
P2O3, [[P4O6]] ஆகக் காணப்படுகிறது.
[[Cl2O3]]
[[Sc2O3]]
[[Ti2O3]]
[[V2O3]]
[[Cr2O3]]
[[Mn2O3]]
[[Fe2O3]]
[[Co2O3]]
[[Ni2O3]]
[[Ga2O3]]
[[As2O3]]
[[Br2O3]]
[[Y2O3]]
[[Nb2O3]]
[[In2O3]]
[[Pb2O3]]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads