சென்னமல்லீசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

சென்னமல்லீசுவரர் கோயில்map
Remove ads

சென்னமல்லீசுவரர் கோயில் அல்லது மல்லிகேஸ்வரர் திருக்கோவில், மல்லிகார்ஜுனர் திருக்கோவில் (Mallikesvarar Temple) என்பது சென்னை நகரம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கட்டபட்ட முதல் கோயிலாகும். சென்னமல்லீசுவரர் கோயிலானது தேவராஜ முதலியார் தெரு, சௌகார்பேட்டை, சென்னையில் அமைந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று.

விரைவான உண்மைகள் சென்னமல்லீசுவரர் கோயில்Mallikesvarar Temple, பெயர் ...
Remove ads

வரலாறு

தற்போதைய சென்னை உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் போன்றவற்றை, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் கம்பேனி நிறுவனத்தார், மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் இந்த இருகோயில்களும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.

Remove ads

கோயில் அமைப்பு

சென்னமல்லீஸ்வரர் திருக்கோயிலின் நுழைவு வாயிலில் மணிமண்டபம் ஒன்று காணப்படுகிறது. உள்ளே நுழைந்ததும் பிரசன்ன விநாயகர் காட்சியளிக்கிறார். மேற்குப் பிராகாரத்தில் வில்வ மரமும் முருகர் சன்னிதியும் உள்ளன. அன்னை பிரமராம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் அருணகிரிநாதர் தனிச் சன்னிதியில் உள்ளார். அருணகிரிநாதருக்கு தனிச் சன்னிதி அமைந்த ஆலயங்கள் குறைவு. அவற்றில் இதுவும் ஒன்று.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads