செயற்கை விந்தூட்டல்

From Wikipedia, the free encyclopedia

செயற்கை விந்தூட்டல்
Remove ads

செயற்கை விந்தூட்டல் எனப்படுவது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள், ஆணுடன் ஏற்படும் பாலுறவு நிகழ்வினால் ஏற்படும் இயற்கையான விந்தூட்டல் (natural insemination - NI) முறையாலன்றி, செயற்கையான முறையில் விந்தை உட்செலுத்தும் முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் 'தூண்டிய இனப்பெருக்கத் தொழில்நுட்ப முறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண் துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும் விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும். இது மனிதர்களுக்கு மாத்திரமண்றி விலங்கு வளர்ப்பில் கால்நடைகள், பன்றிகள் முதலானவற்றுக்கும் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

விரைவான உண்மைகள் செயற்கை விந்ந்தூட்டல், ICD-9-CM ...

செயற்கை விந்தூட்டல் முறையானது இனவிருத்தி தொழில்நுட்பம், விந்து வழங்கல், விலங்கு வளர்ப்பு ஆகியவற்றுடன் இணைந்து செய்யப்படும். செயற்கை விந்தூட்டல் கருப்பைக்கு வெளியிலான விந்தூட்டம், கருப்பைக்கு உள்ளான விந்தூட்டம் என இரு வகைப்படும். செயற்கை விந்தூட்டத்தின் மூலம் அகனள் தொடர்பினைப் பேணும் பெண்கள் தமக்கான குழந்தையைப் பெற்றுக் கொள்வதுடன் விந்து வீரியமின்மை காரணமாக குழந்தைப் பெறில்லதவர்களுக்கு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும். கருப்பைக்கு உள்ளான விந்தூட்டம் இலகுவான விந்தூட்ட முறையாக கூறப்படுகின்றது. [1]

Remove ads

மனிதர்களில்

எதிப்பால் சேர்க்கையுடைய தம்பதிகளில் கருத்தரித்தல் கடினமாகும் போது செயற்கை முறை விந்தூட்டல் ஒரு மாற்று முறையாகப் பரிந்துரைக்கப்ப்டுகின்றது. இதற்கு முன்னர் வைத்தியர்கள் இயற்கைக் கருத்தரித்தலைத் தடைப்படுத்துகின்ற புறக்காரணிகள் மற்றும் உளவியல் காரணிகளை அகற்ற முனைவர். பின்னர் இருவரதும் கருவளத்தன்மைக்கான சோதனைகளை மேற்கொள்வர். ஆண்களில் குறிப்பாக விந்தின் இயக்கத்தன்மை, எண்ணிக்கை, வீரியம் என்பன சோதிக்கப்படும். கருத்தரித்தல் சாத்தியமாகாதவிடத்து செயற்கை விந்தூட்டம் மேற்கொள்ளப்படலாம்.

செயற்கை விந்தூட்டலில் பயன்படுத்தப்படும் விந்து குழந்தையை எதிர்பார்க்கும் தாயின் கணவனுடையதாக அல்லது வேறு விந்து வழங்கியுடையதாக இருக்கலாம்.இங்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் தாய் குழந்தையின் உயிரியல் தாயாக இருப்பார். ஆனால் விந்து வேறு வழங்கியிடமிருந்து பெறப்படும் போது உரியியல் தந்தை வேறுபடுவார்.

செயற்கை விந்தூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் அமையலாம். எடுத்துக்காட்டுக்கு, சில பெண்களின் நிர்ப்பீடனத் தொகுதி தமது இணையினது விந்தை ஏற்றுக் கொள்ளாமல் விடுதல் .[2] சில பெண்களில் கருப்பை வாயில் சிக்கல்கள் காணப்படலாம்- அதாவது அடைப்புகள், தடித்த தசை. இவர்களுக்கு செயற்கை விந்தூட்டல் பயனுடையது.

தயார்படுத்தல்

முட்டை வெளியேற்றப்பட்டதில் இருந்து பன்னிரண்டு மணி நேரத்தில் கருத்தரித்தல் நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்பதால் பெண்களின் மாதவிடாய்ச் சக்கரம் நுணுக்கமாக் கவனிக்கப்படும். இதற்கு முட்டை வெளியேற்ற கருவி, மீயொலி, குருதிப் பரிசோதனை என்பனவும் உடல் வெப்ப அளவீடு, பெண்குறி தசைகளின் அமைப்பு குஏறித்த அவதானம் என்பனவும் பயன்படும். இதற்காக வேதிப்பொருள் மூலம் முட்டை வெளியேற்றம் தூண்டப்படும் முறை காணப்பட்டாலும் அது பல்கருக்கட்டலுக்கு வாய்ப்பளிக்கும்.

விந்து நேரடியாகவோ அல்லது சுக்கிலத்திலிருந்து வேறாக்க்கப்பட்டு தூய்தாக்கப்பட்ட விந்தோ பயன்படும் [3] தூய்தாக்கப்பட்ட விந்தின் கரு கொள்ளால் அளவு அதிகமாகும். இங்கு செறிவாக்கபட்ட விந்து எண்ணிக்கை துணியப்பட்டு அதிகுளிரூட்டலுக்கு உட்படுத்தபட்டு காக்கப்படும். விந்து வழங்குபவர் சமூகத்தொடர்பு நோய்களுக்கு பரிசோதிக்கபடுவார்.

Remove ads

கருவள அளவு

செயற்கை விந்தூட்டலில் கருக்கொள்ளல் விகிதம் ICI முறையில் ஒரு மாதவிடாய் சுற்றுக்கு 10 முதல் 15% ஆக இருக்கும். [4] IUI முறையில் ஒரு மாதவிடாய் சுற்றுக்கு 15–20% ஆக இருக்கும்.[4][நம்பகத்தகுந்த மேற்கோள்?] IUI இல் ஆறு மாதவிடாய் சுற்றுக்கு, 60முதல் 70% ஆக அமையும்.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads