செய்திப் பத்திரிகைகளின் பதிவாளர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய செய்தித்தாள்களின் பதிவாளர் அலுவலகம், (Office of the Registrar of the Newspapers for India) இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அரசின் துறை ஆகும். இந்த துறையானது இந்தியாவில் செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், நூல்கள் போன்ற வெளியீடுகளை பதிவு செய்வதற்கான இந்திய அரசின் சட்டப்பூர்வ அமைப்பாகும். இது 1 சூலை 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2][3]
இதன் பதிவாளர் அலுவலகம் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது 1867ம் ஆண்டின் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவுச் சட்டம் மற்றும் செய்தித்தாள்களின் பதிவு (மத்திய) விதிகள், 1956 ஆகியவற்றின் அடிப்படையில் செய்தித்தாள்கள் அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கண்காணிக்கிறது.
Remove ads
கடமைகள்
- வெளியிடப்படும் அனைத்து இந்தியச் செய்தித்தாள்கள் பற்றிய விவரங்களைக் கொண்ட பதிவேட்டைத் தொகுத்தல் மற்றும் பராமரித்தல் பணிகளை மேற்கொள்வதுடன், வெளியிடப்படும் செய்தித்தாள்களுக்கான பதிவுச் சான்றிதழை வழங்குதல்.
- 1867ம் ஆண்டின் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நாளிதழ்களின் வெளியீட்டாளர்கள் அனுப்பும் வருடாந்திர அறிக்கைகளை ஆய்வு மற்றும் பகுப்பாய்வு செய்தல்.
- செய்தித்தாள்களுக்கான காகிதத்தை இறக்குமதி செய்வதற்கு வழிகாட்டல் மற்றும் தகுதிச் சான்றிதழை வழங்குதல்.
- அச்சிடுதல் மற்றும் எழுத்து இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செய்தித்தாள் நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் சான்றளித்தல்.
பதிவு
ஒரு செய்தித்தாளைப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்வருமாறு பதிவாளர் மேற்கொள்கிறார்:
- முதல் கட்டமாக விண்ணப்பதாரர் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாவட்ட நீதிபதியிடம் வெளியீட்டின் தலைப்பு சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட நீதிபதி இந்தியச் செய்திப் பத்திரிக்கைகளின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து தலைப்பை சரிபார்க்கப்படுவார்.
- இந்தியச் செய்திப் பத்திரிக்கைகளின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து தலைப்பு சரிபார்ப்புக் கடிதத்தைப் பெற்ற பிறகு, விண்ணப்பதாரர் மாவட்ட நீதிபதி முன் அங்கீகாரத்திற்கான அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டும்.
- மாவட்ட நீதிபதியின் அங்கீகாரத்திற்குப் பிறகு, செய்தித்தாள் அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் முதல் இதழ் வெளியிட வேண்டும். முதல் இதழ் வெளியான பிறகு, விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை இணைத்து செய்தி பதிவாளருக்கு பதிவுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
- தலைப்பு சரிபார்ப்பு கடிதம்
- அங்கீகரிக்கப்பட்ட அறிவிப்பு
- வெளிநாட்டு பிணைப்பு இல்லை என்பதற்கான உறுதிமொழி
- வெளியீட்டின் முதல் இதழ் மற்றும் சமீபத்திய இதழ்
- பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் உள்ளடக்கத் தகவல்/ உறுதிப்படுத்தல்
- அச்சுப்பொறி நிறுவிய சான்றிதழ்
Remove ads
பதிவு மற்றும் வெளியீடு
- இந்தியாவின் அனைத்து வெளியீடுகளும், விற்பனைக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வெளியீடுகளும் செய்திப் பத்திரிகைகளின் பதிவாளரிடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். புழக்க எண்கள் பற்றிய வருடாந்திர அறிக்கையையும் வெளியீட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.[4]
- 31 மார்ச் 2018 நிலவரப்படி, செய்தி பதிவாளர் அலுவலகத்தில் 17,573 செய்தித்தாள்கள் மற்றும் 1,00,666 பருவ இதழ்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads