ஜனார்த்தனசுவாமி கோயில்

From Wikipedia, the free encyclopedia

ஜனார்த்தனசுவாமி கோயில்map
Remove ads

ஜனார்த்தனசுவாமி கோயில் (Janardana Swami Temple) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வர்க்கலா எனும் ஊரில் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் ஜனார்த்தனசுவாமி கோயில், ஆள்கூறுகள்: ...

இது 2000 வருடங்கள் பழமையான கோயில் ஆகும். இதை வர்க்கலா கோயில் என்றும் அழைப்பர். இங்கு ஜனார்த்தன சுவாமியாக விஷ்ணு இருக்கிறார். இது கேரளாவின் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று. இது மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. வர்க்கலா-சிவரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலானது அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது.இது தெற்கு காசி என்றும் அழைக்கப்படும் (தட்சிண காசி அல்லது தெற்கின் பனாரஸ்).[2]

Remove ads

கோயில் அமைப்பு

இக்கோவிலில் உள்ள ஜனார்தனசுவாமி சிலை கிழக்கு திசை நோக்கி இருக்கிறது.இச்சிலையின் வலது கை வாயை நோக்கிச் செல்லும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. வலக்கையானது வாயைச் சென்று அடையும் போது கலியுகம் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம்

அமைவிடம்

இக்கோயிலின் அமைவிடம் 8.731826°N 76.709869°E / 8.731826; 76.709869.

மேற்கோள்கள்

பிற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads