ஜஹாங்கீர் கலைக்கூடம்

From Wikipedia, the free encyclopedia

ஜஹாங்கீர் கலைக்கூடம்map
Remove ads

ஜஹாங்கீர் கலைக்கூடம் (18.9274559°N 72.831703°E / 18.9274559; 72.831703Jehangir Art Gallery) இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் உள்ள ஒரு கலைக்கூடம் ஆகும். இது கே.கே. ஹெப்பர் மற்றும் ஹோமி பாபாவின் வற்புறுத்தலின் பேரில் சர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் என்பவரால் நிறுவப்பட்டது. இது 1952 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலாண்மைக் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த கலைக்கூடம் கட்டுவதற்கான முழுத் தொகையையும் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் நன்கொடையாக வழங்கினார். இந்த கலைக்கூடம் தெற்கு மும்பையில், இந்தியாவின் நுழைவாயில் அருகே உள்ள, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் பின்னால் உள்ள காலா கோடா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு நான்கு கண்காட்சி அரங்குகள் உள்ளன. இந்த காட்சிக்கூடம் ஜி.எம். பூட்டா மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்திற்காக ஜி.எம். பூட்டாவால் வடிவமைக்கப்பட்டதாகும்.[1]  

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இந்த காட்சிக்கூடம் ஜனவரி 21, 1952 ஆம் நாளன்று அப்போதைய பம்பாய் மாநில முதல்வராக இருந்த பி.ஜி. கெர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மற்றும் சர் கோவாஸ்ஜியின் மறைந்த மகனான ஜஹாங்கிரீருக்கு நினைவாக இது அர்ப்பணிக்கப்பட்டது.[2] ஒரு மகத்தான நிறுவனமாகக் கருதப்படுகின்ற இதன் வரலாறு இந்திய கலையின் மறுமலர்ச்சியுடன் ஒன்றாக இணைந்ததாகும். 1970 களில் சோசலிசப் பண்பாட்டை நினைவூட்டுகின்ற சமோவரின் பிரபலமான ஓட்டலும் இந்த வளாகத்தில் உள்ளது. எனப்படுகின்ற, பழங்கால கலைப்பொருள்கள் விற்பனையாளர்கள் என்பதற்கான நாட்டின் பழம் பெரும் உரிமம் பெற்ற நடேசன்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி இலவசம் ஆகும்.

Remove ads

சிறப்பு

20 ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில், மும்பை நகரம் ஒரு பரந்த உலகளாவிய பெருநகரமாக உருவெடுத்தது. கட்டிடங்கள், வீதிகள் மற்றும் நகர்ப்புற இடங்கள் ஆகியவற்றின் பரந்த அமைப்பின் மூலம் உணரப்படும் மிகப் பெரிய உலக நகரங்களைப் போல, மும்பையும் நிறுவனங்களையும் நகர்ப்புறம் சார்ந்த பல இடங்களையும் கட்டியது. அதன் மூலமாக இந்த நகரம் ஒரு தனித்துவமான தன்மையைப் பெற்றது. அந்த வகையில் அமைந்த கட்டடங்களில் ஒன்று ஜஹாங்கீர் கலைக் கூடம் ஆகும். அதற்கான கட்டடக்கலைக்கு அடைணாயளமாக இது அமைந்தது. இது நகரத்தின் உருவத்திற்கும் கருத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த கலைக்கூடம்தெற்கு மும்பையில் கோட்டை பகுதியின் மையமாகக் கருதப்படுகின்ற நகரின் வரலாற்று மையத்தில் அமைந்துள்ளது. இன்னும் குறிப்பாக, இக்கலைக்கூடம் பழைய கோட்டைப் பகுதியின் தென்மேற்கு விளிம்பில், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது. 1960 களில் 'கருப்பு குதிரை' மீது ஏழாம் எட்வர்ட் மன்னர் அமர்ந்த நிலையிலான சிலை அமைக்கப்பட்ட பிறகு இந்த பகுதி பிரபலமாக கோலா கோடா என்று குறிப்பிடப்பட்டது. இது 1960 களில் அதன் முதன்மையான பொது இடத்திலிருந்து அகற்றப்பட்டு பைகுல்லாவில் உள்ள ஜிலாமாடோ உதயனின் தோட்டங்களுக்கு இடம் பெயர்ந்தது. இவ்வாறான இடப்பெயர்ச்சி இருந்தபோதிலும், இந்த கலைக்கூடம் மக்கள் மனதில் என்றும் இருக்கிறது. தொடர்ந்து அப்பகுதி ‘கோலா கோட்க்ர்’ என்று காலப்போக்கில் மாறியது. பல ஆண்டுகளாக, இந்த பகுதி நகரத்தில் முக்கியமான கலை சார்ந்த நிகழ்வுகளுக்கு இந்த இடம் முக்கிய மையமாக உருப் பெற்றது.[3]

Remove ads

கட்டிடக்கலை

இந்த கட்டிடத்தை துர்கா பாஜ்பாய் வடிவமைத்துக் கட்டினார். இது நகரின் ஆரம்பகால கான்கிரீட் கட்டமைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆடிட்டோரியம் மற்றும் கலைக்கூடம் ஆகிய இரு அமைப்புகளின் ஒருங்கிணைந்த நிறுவனம் என்ற நிலையில் இந்தக் கட்டடம் உள்நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. ஒரு உள்முக கலைக்கூடத்தின் கருத்து என்பதானது தற்போது கேள்விக்குரிய நிலையில் இருந்த போதிலும், ஜஹாங்சீர் என்பதானது நகரத்தில் காணப்படுகின்ற உள்நோக்கி காணப்படும் நிலையில் அமைந்துள்ள கலைக்கூடங்கள் பற்றிய ஆரம்பகால நவீனத்துவ கருத்துக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனலாம்.மேலும், ஆடிட்டோரியத்தின் செயல்பாடு என்பதானது கலைக்கூடம் தெருவுக்கு வெளியில் திறந்திருக்கும் நிலையில் அமைய வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது. தெருவை நோக்கிய வண்ணம் அதன் நுழைவாயில் அமைப்பானது எளிதில் நோக்கும்படி அமைந்துள்ளது. பிறிதொரு வகையில் நோக்கும்போது முகப்பின் அமைப்பு கல் வேலைப்பாட்டினைக் கொண்டு அதற்கேற்றாற்போல அமைக்கப்பட்டுள்ளது.

பிரபலமான பண்பாடு

இந்த கலைக்கூடம் மற்றும் சமோவர் உணவகம் ஆகியவை 1975 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான சோட்டி சி பாத் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads