ஜார்பம் காம்லின்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜார்பம் காம்லின் (Jarbom Gamlin, பிறப்பு 16 ஏப்ரல் 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும் அருணாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அருணாச்சலப் பிரதேசத் தலைவரும் ஆவார்.
Remove ads
இளமை
காம்லின் சோக்ஜார் காம்லினிற்கு மகனாக மேற்கு சியாங் மாவட்டத்திலுள்ள அலோங்கில் பிறந்தார். அசாமிலுள்ள கோல்ப்பரா சைனிக் பள்ளியில் படித்தபோது 1976-77 ஆண்டுகளில் பள்ளி மாணவர் தலைவராக இருந்துள்ளார். தில்லியின் புனித இசுடீபன் கல்லூரியிலிருந்து வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்தார். தில்லிப் பல்கலைக்கழகதின் வளாக சட்ட மையத்தில் (Campus Law Centre) சட்டப்படிப்பை முடித்தார்.[2][3]
அரசியல் வாழ்வு
காம்லின் தமது அரசியல் வாழ்வை அனைத்து அருணாச்சலப் பிரதேச மாணவர் சங்கத் துவக்கினார்.[3] 1999-2004ஆம் ஆண்டுகளில் பதின்மூன்றாவது மக்களவையில் மேற்கு அருணாச்சல மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] 2004ஆம் ஆண்டில் மேற்கு சியாங் மாவட்டத்திலுள்ள லிரோமோபா சட்டப்பேரவைத்தொகுதியிலிருந்து நான்காவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2009ஆம் ஆண்டு அதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாவது அருணாச்சல சட்டப்பேரவையின் உறுப்பினரானார். தோர்ச்யீ காண்டுவின் அமைச்சரவையில் நவம்பர் 6,2009 முதல் மின்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[4]
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்
ஏப்ரல் 30, 2011இல் தோர்ச்யீ காண்டு உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த பின்னர் இடா நகரில் கூடிய காங்கிரசு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இவரை தம் தலைவராகத் தேர்ந்தெடுக்க மே 5, 2011 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஏழாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads