ஜெயவந்திபென் மேத்தா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஜெயவந்திபென் மேத்தா
Remove ads

ஜெயவந்திபென் மேத்தா (Jayawantiben Mehta)(20 திசம்பர் 1938 - 7 நவம்பர் 2016) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

விரைவான உண்மைகள் ஜெயவந்திபென் மேத்தாJayawantiben Mehta, பிறப்பு ...
Remove ads

மாநகர உறுப்பினர்

ஜெயவந்திபென் மேத்தா 1962-ல் அரசியலில் நுழைந்தார். 1968-ல் நடைபெற்ற பெருநகரமும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர்

1975-ல் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையின் போது, ஜெயவந்திபென் மேத்தா 19 மாதங்கள் சிறையிலிருந்தார். ஜெயவந்திபென் 1978-ல் மகாராட்டிர சட்டமன்றத்திற்கு ஓபரா ஹவுஸ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1985 வரை இரண்டு முறை பணியாற்றினார்.

மக்களவை உறுப்பினர்

1989-ல் ஜெயவந்திபென் மேத்தா முதன்முதலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அரசாங்கத்தில் மின்துறை அமைச்சராக இருந்தார்.

ஜெயவந்திபென் மேத்தா 1989-ல் ஒன்பதாவது மக்களவையில் வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதியினையும், 1996 மற்றும் 1999-ல் 11வது மற்றும் 13வது மக்களவையில் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியினையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பாஜக பணி

ஜெயவந்திபென் 1991 முதல் 1995 வரை பாஜகவின் மகளிர் அணித் தலைவராகவும், 1993 முதல் 1995 வரை பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads