ஜெய் நகர் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய் நகர் பூங்கா (ஆங்கிலம்: Jai Nagar Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கோயம்பேடு புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெய் நகர் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13.0694°N 80.2071°E ஆகும்.
பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கி வரும் 525 பூங்காக்களில் ஜெய் நகர் பூங்காவும் ஒன்றாகும்.[1]
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில், ஒயிலாட்டம், காவடியாட்டம் , கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை நடனம்[2] போன்ற நாற்பது கலைகளுடன் கூடிய கலாச்சார பண்பாட்டு விழா,[3] 14-01-2023 முதல் 17-01-2023 வரை[4] நடைபெற்ற சென்னையின் முக்கிய பதினெட்டு இடங்களில்[5] ஜெய் நகர் பூங்காவும் ஒன்று.[6][7][8]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads