டாக்கா மாவட்டம்

வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

டாக்கா மாவட்டம்
Remove ads

டாக்கா மாவட்டம் (Dhaka District) (Bengali: ঢাকা জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்கா அமைந்ததும், வங்கதேசத்தின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் மத்திய வங்காள தேசத்தில் உள்ளது.[1] வங்காள தேசத்தில் மக்கள் தொகை அடர்த்தி மிக்க மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் டாக்கா நகரம் ஆகும். மெல்லிய பருத்தி நூலாலான மஸ்லின் துணிகளுக்கு டாக்கா பெயர் பெற்றது.[2]

Thumb
வங்காளதேசத்தில் டாக்கா மாவட்டத்தின் அமைவிடம்
Remove ads

மக்கள் தொகையியல்

1463 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட டாக்கா மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 1,20,43,977 ஆக உள்ளது. [3] அதில் ஆண்கள் 65,55,792 ஆகவும், பெண்கள் 54,88,185 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 119 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 8229 நபர்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.5% ஆக உள்ளது.[4]

மாவட்ட நிர்வாகம்

Thumb
டாக்கா மாவட்டம்

டாக்கா மாவட்டத்தின் ஊரகப் பகுதியில் ஐந்து துணை மாவட்டங்கள், நகரப் பகுதிகளில் நாற்பத்தி ஒன்று துணை மாவட்டங்கள், எண்பத்தி ஆறு ஊராட்சி ஒன்றியங்கள், 1999 கிராமங்கள் மற்றும் ஒரு மாநகராட்சி கொண்டது. 92 தொகுதிகளைக் கொண்ட டாக்கா மாநகராட்சி உள்ளாட்சித் துறையில் செயல்படுகிறது.

நிலவியல்

டாக்கா மாவட்டம் வடக்கில் காஜிப்பூர் மாவட்டம் மற்றும் தங்கையில் மாவட்டமும், தெற்கில் முன்ஷிகஞ்ச் மாவட்டம் மற்றும் இராஜ்பாரி மாவட்டமும், கிழக்கில் நாராயணன்கஞ்ச் மாவட்டமும், மேற்கில் மணிகஞ்ச் மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டது.

பத்மா ஆறு, தாலேஷ்வரி ஆறு, இச்சாமதி ஆறு, சீதாலட்சிய ஆறு, புரிகங்கா ஆறு மற்றும் பல சிறு ஆறுகள் டாக்கா மாவட்டத்தில் பாய்கிறது. டாக்கா மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1931 மில்லி மீட்டராகும். குறைந்த பட்ச வெப்பம் 11.5° செல்சியசாகவும்; அதிக பட்ச வெப்ப நிலை 34.5° செல்சியசாகவும் உள்ளது.

சமயம்

டாக்கா மாவட்டத்தில் 12,000 பள்ளிவாசல்களும், 3012 இந்துக் கோயில்களும், 530 கிறித்தவ தேவாலயங்களும், 174 பௌத்த விகாரங்களும் உள்ளது.

பொருளாதாரம்

வங்காள தேசத்தின் பெரிய வணிக மையமாக டாக்கா விளங்குகிறது.[5] பருத்தி துணி ஆலைகள், சணல் ஆலைகள் அதிகம் கொண்ட இம்மாவட்டம், பருத்தித் துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads