டி. எம். கிருஷ்ணா

From Wikipedia, the free encyclopedia

டி. எம். கிருஷ்ணா
Remove ads

டி. எம். கிருஷ்ணா (T. M. Krishna, பிறப்பு:22 சனவரி 1976) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

விரைவான உண்மைகள் டி. எம். கிருஷ்ணா, பிறப்பு ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். தாய், கலாபீடம் எனும் பெயரில் ஒரு இசைப்பள்ளியை நடத்திவந்தார். ஆரம்பகால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடம் பெற்ற டி. எம். கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை பயின்றார். செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடம் ஏழாண்டு காலம் இசைப்பயிற்சியை பெற்றுள்ளார் டி. எம். கிருஷ்ணா.

தொழில் வாழ்க்கை

பாடகராக இருப்பதோடு, பாடக் கற்றுத்தரும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இசையமைப்பாளராகவும், இசை குறித்து எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். உலகம் முழுதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார்.

இலங்கையில் இசை நிகழ்ச்சிகள்

இலங்கை கொழும்பில் 2010ல் இசைக் கச்சேரி செய்த டி. எம். கிருஷ்ணா, 2011ல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அக்டோபர் மூன்றாம் நாள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த அவரது சுமார் மூன்று மணி நேர கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் செயற்பாடுகள் அவரைக் கவர்ந்தன. அக்கல்லூரியின் முன்னேற்றத்துக்கு பாடுபடப்போவதாக கிருஷ்ணா தெரிவித்தார்.[1]

விருதுகள்

  • சிறந்த முக்கியக் கலைஞர் - யூத் அசொசியேசன் போர் கிளாசிக்கல் மியூசிக், 1989
  • திறமைமிகு பாடகர் (25 வயதிற்குக் கீழ்)- மியூசிக் அகாதெமி (சென்னை), 1994
  • சிறந்த இளம் பாடகர் - கிருஷ்ண கான சபா, 1995
  • சிறந்த இசைக் கலைஞர் - நாரத கான சபா, 1995
  • அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் விருது - மியூசிக் அகாதெமி (சென்னை), 1996
  • யுவ கலா பாரதி - பாரத் கலாச்சார், 1997
  • ஸ்ரீரங்கம் கோபாலரத்தினம் விருது - மியூசிக் அகாதெமி, 1998
  • ராமகிருஷ்ண ஐயர் விருது - மியூசிக் அகாதெமி, 1999
  • சிறந்த கலைஞர் - மியூசிக் அகாதெமி, 2001
  • இளைஞர் விருது - மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை, 2001
  • கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2001
  • இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2014
  • ரமோன் மக்சேசே விருது, 2016 [2]
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads