டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

டி. எஸ். சேனநாயக்கா கல்லூரிmap
Remove ads

டி.எஸ். சேனநாயக்கா கல்லூரி (D. S. Senanayake College, சிங்களம்: ඩී.ඇස්.සේනානායක විද්යාලය) என்பது இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் தேசியப் பாடசாலைகளில் ஒன்றாகும். இது கொழும்பு, கறுவாத்தோட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை வகுப்புகள் உள்ளன. இப்பாடசாலை 1967 பெப்ரவரி 10 இல் தொடங்கப்பட்டது. ஆர். ஐ. டி. அலசு என்பவர் இதன் முதலாவது தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[1][2] இலங்கையின் முதலாவது பிரதமர், டி. எஸ். சேனநாயக்காவின் பெயரால் இக்கல்லூரி அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி D. S. Senanayake College, முகவரி ...

இப்பாடசாலையில் தரம் 1 முதல் 13 வரை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கற்பித்தல் நடைபெறுகின்றன. தற்போது இக்கல்லூரியில் 8000 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர். இது நாட்டின் இரண்டாவது பெரிய பல-இனப் பாடசாலையாகும். பாடசாலை அமைந்துள்ள கிரெகரி வீதியின் பெயர் 2013 இல் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை என மாற்றப்பட்டது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads