டிசிப்ரோசியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

டிசிப்ரோசியம்(III) புரோமைடு
Remove ads

டிசிப்ரோசியம்(III) புரோமைடு (Dysprosium(III) bromide) என்பது DyBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

தயாரிப்பு

டிசிப்ரோசியத்துடன் புரோமினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம்(III) புரோமைடு உருவாகிறது.:[4]

2Dy + 3Br2 → 2DyBr3

டிசிப்ரோசியம் புரோமைடு அறுநீரேற்றை டிசிப்ரோசியம்(III) புரோமைடு கரைசலை படிகமாக்குவதன் மூலம் பெறலாம். இதை அம்மோனியம் புரோமைடுடன் வெற்றிடத்தில் சூடாக்கி நீரிலி வடிவத்தைப் பெறலாம்.[1] டிசிப்ரோசியம் ஆக்சைடு மற்றும் அலுமினியம் புரோமைடு அதிக வெப்பநிலையில் Al2Br6 வடிவத்தில் DyAl3Br12 உடன் வினைபுரிகிறது. இது குறைந்த வெப்பநிலையில் டிசிப்ரோசியம்(III) புரோமைடாக சிதைகிறது:[5]

Dy2O3 + Al2Br6 → Al2O3 + 2 DyBr3
Remove ads

பண்புகள்

டிசிப்ரோசியம்(III) புரோமைடு நீரில் கரையக்கூடிய வேதிப்பொருளாகும். வெண்மை கலந்த -சாம்பல் நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக இது காணப்படுகிறது. மேலும், R3(எண். 148) என்ற இடக்குழுவுடன் பிசுமத்(III) அயோடைடு வகை முக்கோண படிகக் கட்டமைப்பை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads