டொமினிக் குக்

From Wikipedia, the free encyclopedia

டொமினிக் குக்
Remove ads

டொமினிக் குக் (Dominic Cork, பிறப்பு: ஆகத்து 7 1971), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 864 ஓட்டங்களை எடுத்தார்.இதில் 59 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிக பட்ச ஓட்டம் ஆகும். மேலும் பந்துவீச்சில் 131 இழப்புகளைக் கைப்பற்றினார். 180 ஓட்டங்களை எடுத்துள்ள இவர் 41 இழப்புகளைக் கைப்பற்றினார். 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 312 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 9812 ஓஒட்டங்களை எடுத்துள்ள இவர் 969 இழப்புகளைக் கைப்பற்றினார். இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 200* ஓட்டங்களை எடுத்தார். 307 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

1990 இல் டெர்பிஷையர் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமான இவர் 1992 இல் 21 வயதில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். 1992 முதல் 2002 வரை இங்கிலாந்துக்காக 69 போட்டிகளில் விளையாடினார். 2004 ஆம் ஆண்டில் லங்காஷயர் துடுப்பாட்ட அணியில் சேர்வதற்கு முன்பு கார்க் 13 ஆண்டுகள் டெர்பிஷையர் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு லங்காஷயரை விட்டு வெளியேறிய கார்க், 2009 முதல் 2011 வரை விளையாடிய ஹாம்ப்ஷயரில் சேர்ந்தார், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இவர் தலைவராக செயல்பட்டார்.[1] ஹாம்ப்ஷயரில் இருந்தபோது, இவர் 2009 ஃப்ரெண்ட்ஸ் பிராவிடன்ட் கோப்பையினை வென்றார், மேலும் 2010 ஃப்ரெண்ட்ஸ் பிராவிடன்ட் இ20 இல் கவுண்டியை போட்டியில் வெற்றி பெற்றார். இவர் 2011 ஆம் ஆண்டின் முடிவில் ஹாம்ப்ஷயர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு இவர் 22 செப்டம்பர் 2011 அன்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் நியூஸில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது பிரபலமான புனைபெயர் "கார்க்கி" ஆகும்.

Remove ads

ஆரமபகால வாழ்க்கை

இவரது பெற்றோர்கள் இருவரும் மேற்கு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் ஆவர். இவரது பெற்றோர்களான மேரி மற்றும் ஜெரால்ட் கார்க் ஆகியோரின் மூன்று மகன்களில் இளையவராக நியூகேஸில்-அண்டர்-லைமில் கார்க் பிறந்தார்.[2] இவரது தாத்தா, ஆர்க்கிபால்ட் கார்க், 1910 களில் போர்ட் வேல் எஃப்சிக்காக தொழில் முறை அல்லாத கால்பந்து போட்டிகளில் விளையாடினார். இவரது தந்தை நிதி ஆலோசகராக பணியாற்றினார். நியூகேஸில்-அண்டர்-லைம் கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்கு முன்பு , ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இவர் கல்வி பயின்றார் .[3]

Remove ads

சொந்த வாழ்க்கை

கார்க் தனது முதல் மனைவி ஜேனென்பவரை 22 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்,[4] ஆனால் சர்வதேச த்டூப்பாட்டப் போட்டியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்களால் திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு வழிவகுத்தது.[4] இந்தத் தம்பதியினருக்கு கிரெக் எனும் ஒரு மகன் உள்ளார். கிரெக், 2014 இல் டெர்பிஷையருக்காக அறிமுகமானார், கவுண்டியின் அகாதமியில் சேர்ந்த பிறகு நான்கு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடினார்.[5] இவரது மகனும் பன்முகத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

கார்க் டெர்பியில் வசித்து வருகிறார், மேலும் டோனா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.[4] இவர் ஸ்டோக் சிட்டி எஃப்சியின் ஆதரவாளர் ஆவார்.[6][7]

ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கான விளையாட்டு வர்ணனையாளரக இருக்கிறார். பாகிஸ்தான் தொலைக்காட்சி கழகத்திற்காக இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்தபோது, இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி மீதான 2009 தாக்குதலில் சிக்கியவர்களில் இவரும் ஒருவராவார். போட்டி நடுவர் கிறிஸ் பிராட் தாக்குதலின் கூறுகளை இட்டுக்கட்டியதாக பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியத் தலைவர் இஜாஸ் பட் கூறியதைத் தொடர்ந்து இவர் விமர்சித்தார்.[8] இவர் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் பணியாற்றினார்.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads