த ஆழ்சிலி புக் ஆவ் நாட்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
த ஆழ்சிலி புக் ஆவ் நாட்சு (The Ashley Book of Knots) என்பது முடிச்சுகள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம். இந்நூலை 11 ஆண்டுகளாக கருத்துகள் சேகரித்து 1944 ஆம் ஆண்டு கிளிப்வோர்டு ஆழ்சிலி (Clifford Ashley) என்பவர் வெளியிட்டார். இதில் 2000 உக்கும் கூடுதலான, பல்வேறு முடிச்சுகள் பற்றி 3854 தலைப்புகளில் ஏறத்தாழ 7000 படங்களுடன் குறிப்புகள் உள்ளன. முடிச்சுகளை எவ்வாறு முடிவது, அவற்றின் பயன்கள் யாவை, அவை எவ்வகையான பகுப்பில் அடங்கும் என்றும், அவற்றுள் சிலவற்றின் வரலாறுகள் என்ன வென்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இன்றளவும் முடிச்சுகளைப் பற்றிய நூல்களில் இது முன்னணி நூலாக உள்ளது. எவை எவை நல்ல முடிச்சுகள், எவை எவை குறையுள்ள முடிச்சுகள் என்பனவற்றை இந்நூல் குறிக்கின்றது.


Remove ads
உசாத்துணை நூலாகப் பயன்பாடு
இந்நூல் பரவலாக கிடைப்பதாலும், இதில் விரிவாக செய்திகள் இருப்பதாலும் முடிச்சுகள் பற்றிய துறையில் இது ஒரு தரமான உசாத்துணைப் பார்வை நூலாக பயன்படுகின்றது. ஒவ்வொரு முடிச்சுக்கும் ஆழ்சிலி தந்த எண்களை குழப்பம் இன்றி குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. நெடுங்காலமாக முடிச்சுகள் பற்றிய அறிவு வளர்ந்து வந்திருப்பதாலும், பலரும் பல பெயர்கள் இட்டு அழைப்பதாலும், குழப்பங்களைத் தவிர்க்க ஆழ்சிலி தந்த எண் குறியீடு பயனுடையதாகும். ஆழ்சிலியின் புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட முடிச்சின் பெயரைக் குறிப்பிட "இறுக்கு முடிச்சு (Constrictor Knot), ABOK #1249", அல்லது சூழல் தெளிவாக இருந்தால், இன்னும் சுருக்கமாக, "#1249" என்றும் குறிப்பிடுவதுண்டு[1]. இப் புத்தகத்தின் தலைப்பை கீழ்க்காணும் எழுத்துகளாலும் சுருக்கிச் சொல்வதுண்டு:TABOK, TABoK, அல்லது ABoK.
சில முடிச்சுகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆழ்சிலி எண்கள் இருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும், ஏனெனில் சில முடிச்சுகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்படுகளும் வடிவங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக #1249 என்ன்னும் முதன்மைத் தலைப்பில் உள்ள முடிச்சு பிணைக்கும் முடிச்சுகள் (binding knots) என்னும் உட்பிரிவில் உள்ளது, ஆனால் இது தொழில் முடிச்சுகள் என்னும் உட்பிரிவில் #176 என்று குறிப்பிடப்படுகின்றது.
ஆழ்சிலியின் முடிச்சுகள் பற்றிய நூல், தேங்காய் நார் போன்ற இயற்கைப் பொருட்களால் ஆன உராய்வுப் பிடிப்பு மிக்க கயிறுகளுக்கான முடிச்சுகள் பற்றியது. இவை தற்காலத்தில் வழுக்கும் தன்மைகொண்ட செயற்கை பொருள்களால் (நைலான் போன்ற பொருட்களால்) ஆன நார்களால் ஆன கயிறுகளைக் கொண்டு முடியும் பொழுது தேவையான பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம்.
அனைத்துலக முடிச்சுகள் வல்லுனர்கள் குழுமம் (International Guild of Knot Tyers) இவற்றை மீள்பார்வையிட்டு சில திருத்தங்கள் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக ஒரு முடிச்சை வேட்டையாளர் தொடுப்பு அல்லது ரிக்கெரின் தொடுப்பு (Hunter's bend or Rigger's bend) (#1425A) என்பதை 1979 இல் சேர்த்துள்ளது.
Remove ads
அடிக்குறிப்புக்ளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads