தசநாமி மரபு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தசநாமி மரபு (Dashanami Sampradaya) (IAST Daśanāmi Saṃpradāya "Tradition of Ten Names") என்பது இந்து சமய ஒரே தண்டத்தை கொண்ட கைக்கொணட ஆதிசங்கரர் மரபு வழிவந்த சந்நியாசிகளின் மடங்களைக் குறிக்கும்.[1][2][3] தீர்த்தர், ஆசிரமம், வனம், ஆரண்யம், கிரி, பர்வதம், சகரம், புரி, பாரதி மற்றும் சரசுவதி எனும் தசநாமி (பத்து பெயர்கள்) கொண்ட சந்நியாசிகள் அத்வைத வேதாந்தத்தைப் பின்பற்றுவர்கள் ஆவார். இவர்களை தசநாமி மரபினர் என்று அழைப்பர்.[4]

கி. பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர், இந்தியாவில் திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளில் துவாரகை மடம், புரி கோவர்தன மடம், சிருங்கேரி சாரதா மடம் மற்றும் ஜோஷி மடம் நிறுவினார்.
துவாரகை மடாபதிகள் தீர்த்தர் மற்றும் ஆசிரமம் இரண்டு பெயர்களில் ஒன்றையும், புரி கோவர்தன மடாதிபதிகள் வனம் அல்லது ஆரண்யம் என இரண்டு பெயர்களில் ஒன்றையும், ஜோஷி மடாதிபதிகள் கிரி, பர்தவம், சகரம் என்ற மூன்று பெயர்களில் ஒன்றையும், சிருங்கேரி சாரதா மடம்திபதிகள் புரி, பாரதி அல்லது சரசுவதி என மூன்று பெயர்களில் ஒன்றை தங்கள் துறவப் பெயருடன் தாங்கியிருப்பர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads