தண்டோ முகமது கான் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

தண்டோ முகமது கான் மாவட்டம்map
Remove ads

தண்டோ முகமது கான் மாவட்டம் (Tando Muhammad Khan District) (Sindhi: ضلعو ٽنڊو محمد خان) ; (Urdu: ضلع ٹنڈو محمد خان) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தில் ஐதராபாத் கோட்டத்தில் அமைந்த ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். அமைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தண்டோ முகமது கான் நகரம் ஆகும். சிந்து ஆறு இம்மாவட்டத்தின் வடமேற்கில் பாய்கிறது. இம்மாவட்டம் மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் தண்டோ முகமது கான் மாவட்டம் ضلعو ٽنڊو محمد خان, நாடு ...
Remove ads

மாவட்ட எல்லைகள்

இம்மாவட்டத்தின் வடக்கில் ஐதராபாத் மாவட்டம் மற்றும் தண்டோ அல்லாயார் மாவட்டமும், தெற்கிலும், கிழக்கிலும் பதின் மாவட்டமும், மேற்கில் தட்டா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

வரலாறு

தண்டே முகமது கான் நகரத்தை மீர் முகமது கான் சவானி தல்வார் என்பவரால் நிறுவப்பட்டது. இந்நகரம் ஐதராபாத் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

நிர்வாக வசதிக்காக இம்மாவட்டத்தை புல்ரி ஷா கரீம் , தண்டோ குலாம் ஐதர் மற்றும் தண்டோ முகமது கான் என மூன்று தாலுக்காக்களாகப் பிரித்துள்ளனர். [1]

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 6,19,886 ஆக உள்ளது.[2] 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில் சிந்தி மொழியை 91.47% மக்களும், பஞ்சாபி மொழியை 2.8% மக்களும், உருது மொழியை 2.83% மக்களும் பேசுகின்றனர்.

தட்ப வெப்பம்

கோடைக்காலமான ஏப்ரல், மே, சூன் மாதங்களில் அதிகபட்ச வெப்பம் 30° செல்சியஸ் வரையிலும், குளிர்காலமான டிசம்பர் மற்று சனவரி மாதங்களில் குறைந்தபட்ச வெப்பம் 10° செல்சியஸ் வரையிலும் உணரப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 130 மில்லி மீட்டர் ஆகும்.

வேளாண்மை

70% மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டத்தின் முக்கியப் பயிர்கள் கரும்பு, நெல், கோதுமை, பருத்தி ஆகும். கால்வாய் நீர் பாசானத்தை நம்பியுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஆதாரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads