தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு அங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் (Tamilnadu Police Museum, Chennai) என்பது தமிழ்நாட்டின் சென்னையின் எழும்பூர், பாந்தியன் சாலையில் அமைந்துள்ள ஒரு காவல் துறை அருங்காட்சியகம் ஆகும். இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட பழைய காவல் ஆணையரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடமானது 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக உள்ளது. இதில் தரைத்தளத்தில் தமிழ்நாடு காவல் துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]
Remove ads
வரலாறு
அருணகிரி முதலியார் என்பவருக்குச் சொந்தமான மாளிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள 14 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் ₹ 21,000 க்கு வாங்கப்பட்டு, 1856 ஆம் ஆண்டு சென்னையின் முதல் காவல் ஆணையர் லெப்டினன்ட் கர்னல் ஜான் கார்ன் போல்டர்சனின் தலைமையகமாக மாற்றப்பட்டது.[2] பின்னர் இங்கு இயங்கிவந்த காவல் ஆணையரக அலுவலகம் 2017 ஆம் ஆண்டு வேப்பேரியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.[3] அதன்பிறகு இக் கட்டம் பழமை மாறாமல் ரூ 6 கோடியே 40 இலட்சம் செலவில் புதுப்பிக்கபட்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்ததை 2021 செப்டம்பர் 28 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.[4]
காட்சிக்கூடங்கள்
இந்த கட்டடத்தில் உள்ள காட்சிக்கூடங்களில் காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட ஊர்திகள், சீருடைகள், இசைக் கருவிகள், காவல் துறையால் மீட்கப்பட்ட சிலைகள், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்கும் கருவிகள், சிறைச்சாலை மாதிரி, பல்வேறு வகையான துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், வாள்கள், காவல் துறையில் வழங்கப்படும் பதக்கங்களின் மாதிரிகள், முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல் துறை தொடர்பாக அக்காலத்தில் இயற்றப்பட்ட முக்கியதான அறிவிப்புகள், பிரித்தானியர் கால காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழ்நாடு காவல் துறையின் தொடக்க கால சீருடைகள், கச்சுப் பட்டைகள், மோப்ப நாய் படைகளின் ஒளிப்படங்கள், கம்பியில்லா தொலைதொடர்பு கருவிகள், கலைப்பொருட்கள் போன்றவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.[5] மேலும் இங்கு வேலுப்பிள்ளை பிரபாகரன், வீரப்பன் போன்றோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[6]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads