தர்மபாலர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தர்மபாலர்கள் என்பது வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகள் ஆவர். தர்மபாலர்கள் என்றால் தர்மத்தை காப்பவர்கள் என்று பொருள். வஜ்ரயான பௌத்தத்தில் பல்வேறு தர்மபாலர்கள் வணங்கப்படுகின்றனர்.[1][2][3]
வஜ்ரயான பௌத்தத்தில் இவர்கள் மற்ற உக்கிர மூர்த்திகளை போலவே மிகவும் பயங்கரமாக சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் பல கரங்கள், தலைகள் கொண்டவர்களாக காட்சியளிக்கின்றனர். தர்மபாலர்கள் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும் அவர்களை அனைவரும் கருணையின் வடிவான போதிசத்துவர்களின் உக்கிர உருவங்களாக இருப்பதால் இவர்கள் இந்த உக்கிரம் உயிர்களின் நன்மைகளுக்கே எனக் கருதப்படுகிறது.
திபெத்தில், கீழ்க்கண்ட 8 முக்கிய தர்மபாலர்கள் வணங்கப்படுகின்றனர்:
தர்மபாலர்களை வழிபடும் வழக்கம் பழங்கால இந்தியாவிலே தொன்றியது. பிறகே தந்திர பாரம்பரியத்தின் மூலமாக திபெத்துக்கு ஜப்பானுக்கும் பிற்காலத்தில் பரவியது.
திபெத்தில், ஒவ்வொரு புத்தமடமும் ஒரு தர்மபாலகரை வணங்குவது வழக்கமாக உள்ளது. பரவலாக வணங்கப்படும் தர்ம்பாலகர்களின் போதிசத்துவர்களின் அம்சமாகவே வணங்கப்படுகின்றனர்.
தர்மபாலகர்கள் தர்மத்தை காக்கும் பொறுப்புடைய்வர்கள். மேலும் இவர்கள் தர்மத்தை பின்பற்ற விடாமல் தடுக்கக்கூடிய அனைத்து உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறத் தடைகளை களைந்து தர்மத்தின் பின்பற்றக்கூடிய ஒரு நல்ல மனநிலையை அருளக்கூடியவர்கள் என கருதப்படுகின்றனர். தர்மபாலகர்கள் புத்தர்களாகவோ அல்லது போதிசத்துவர்களாகவும் இருக்கலாம். சூன்யத்தன்மையைப் புரிந்து கொண்ட தர்மபாலர்களே சரணடைவதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads