தாய்லாந்து நாட்டுப்பண்
நாட்டுப்பண் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிலிங் சாட் அல்லது தாய்லாந்து நாட்டுப்பண் என்பது தாய்லாந்து நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இது 1939 திசம்பர் 10 அன்று ஏற்கப்பட்டது. இந்த நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்தவர், ஃப்ரா சென்டுரியாங் என்ற செர்மானியர். இதற்கு பாடல்வரிகளை எழுதியவர் லுவாங் சரனுபிரபான் என்பவராவார். பிலிங் சாட் (தாய்: เพลงชาติ), என்ற தாய் சொல்லுக்கு நாட்டுப்பண் என்பது பொருளாகும். பொதுவாக நாட்டுப்பண்ணை குறிப்பிட இந்தச்சொல் பயன்படுத்தப்படுகிறது. பிலிங் சாட் தாய் (தாய்: เพลงชาติไทย), என்றால் தாய்லாந்து நாட்டுப்பண் என்று பொருளாகும் தாய்லாந்து நாட்டுப்பண்ணை இச்சொல் கொண்டே குறிக்கின்றனர்.
1932 ஆட்சிக் கவிழ்புக்கு சில நாட்கள் கழித்து தாய்லாந்தின் நாட்டுப்பண் இசையமைக்கப்பட்டது. போலந்தின் நாட்டுப்பண்ணின் இசையையொட்டியே இந்த நாட்டுப்பண்ணின் இசை அமைந்த்து. இது முதன்முதலில் 1932 சூலையில் ஒலிபரப்ப்பட்டது. இதன். இதன் அசல் வரிகள் குன் விச்சிட்மரா என்பவரால் எழுதப்பட்டது.
1932 க்கு முன் சான்சோயின் பிரா பராமி என்ற பாடல் சாயாமின் நாட்டுப்பண்ணாக இருந்தது.
1934 இல் புதிய நாட்டுப்பண், இசை ஆகியவற்றை கேட்டு அந்த நாட்டு அரசு போட்டி நடத்தியது. சங்வாங் துவா பத்யாகோசோல் என்பவர் "பிலெங் மகா நில்மிட்" என்று ஒரு பாரம்பரிய பாணியில் ஒரு மெட்டமைத்தார். ஆனால் ஃப்ரா ஜெணெடுரியாங் என்பவரின் மெல்லிசை தேர்வு செய்யப்பட்டது. காரணம், இதன் மெல்லிசை நவீனமாக இருந்தது. பிறகு ஃப்ரா ஜெணெடுவின்யா இசையையும் முதல் பரிசுபெற்ற வரிகளான குன் விச்சிட்மராவின் வரிகளும் சேர்த்து இசைவடிவம் தரப்பட்டது. இப்பாடல் 1939 வரை பயன்படுத்தப்பட்டது. இதில் இரண்டாம் பரிசு பெற்ற சான்ப காம்விலை (ฉันท์ ขำ วิไล) என்பவர் எழுதிய சில வரிகள் 1934 இல் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
1939, இல் இந்த நாட்டின் சாயாம் என்ற பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது. இதனால் இந்தாட்டின் நாட்டுப்பண் வரிகளை மாற்றி புதியதாக எழுத போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் லு ஆங் சரனுப்ரஃபான் என்பவரின் வரிகள் சிறந்த்தாக பரிசுபெற்றது. பிரதமர் பிபுன்சோங்ராம் இந்த நாட்டுப்பண் நாள்தோரும் 08:00 மணி மற்றும் 18:00 மணி பொழுதுகளில் ஒலிக்கும் என்றும் அதற்கு குடிமக்கள் எழுந்து நின்று நாட்டுக்காக மரியாதை செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார். காலை மாலை என இருவேளைகளிலும் பொது இடங்களில் ( எ.கா. பள்ளிகள், பணி இடங்கள், பொது கட்டடங்கள்) ள்நாட்டுப்பண் இசைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றியும் இறக்கவும் செய்தனர். இதே போல காலை மாலை இருவேளைகளிலும் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
Remove ads
வரிகள்
தாய் வரிகள் மற்றும் மொழிபெயர்பு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads