தாரகன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாரகன் இந்து தொன்மவியல் புராணங்களிலும், நூல்களிலும் வருகின்ற அரக்கர் குல அரசன் சூரபத்மனின் சகோதரன் ஆவார். இவர் தாரகாசூரன் என்றும் அறியப்படுகிறார். மிகுந்த தவத்தினால் சிவக்குமாரனால் மட்டுமே மரணம் நேரும் வரத்தினை பெற்றிருந்தார். அதனால் சிவபெருமான் பார்வதி திருமணம் நடைபெற அனைத்து தேவர்களும் விரும்பினார்கள்.

கடுந்தவம்

தாரகனின் கடுந்தவம் பற்றி சிவமாகபுராணம் கூறிகிறது.[1]

  1. ஒற்றைக் காலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
  2. பெருவிரலை மட்டும் ஊன்றி நூறு ஆண்டுகள் தவம்
  3. நீரை மட்டும் உட்கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
  4. காற்றை மட்டும் உட்கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
  5. ஜலம்(நீரில்) நூறு ஆண்டுகள் தவம்
  6. வெயிலில் நூறு ஆண்டுகள் தவம்
  7. பஞ்சா்கினியின் மத்தியில் நூறு ஆண்டுகள் தவம்
  8. மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
  9. அதோமுகமாக நூறு ஆண்டுகள் தவம்
Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads