திருகோணமலைத் துறைமுகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருகோணமலைத் துறைமுகம் (Trincomalee Harbour) இலங்கையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் மையத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான இயற்கைத் துறைமுகம் ஆகும். ஐரோப்பியக் குடியேற்றக் காலத்தில் இத்துறைமுகத்தைக் கைப்பற்ற பல சமர்கள் இடம்பெற்றுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரெஞ்சு, மற்றும் ஆங்கிலேயர் இத்துறைமுகத்தைக் கைப்பற்றி வைத்திருந்தனர்.
Remove ads
புவியியல்
திருகோணமலைத் துறைமுகம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. உள் துறைமுகம், மற்றும் வெளித் துறைமுகம் அவையாகும். உட்துறைமுகம் பாறைகளும், நிலங்களும் சூழ்ந்தது மட்டுமில்லாமல், இயற்கையாகவே ஆழம் அதிகமானதும் ஆகும். இதனால் நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை இங்கே பாதுகாப்பாக இருக்க முடியும். ரேடார் மற்றும் சோனார் (Sonar) மூலமான கண்காணிப்புகளில் இருந்து தப்பிக்கவும் முடியும்.
இத்துறைமுகத்தில் 1630 எக்டேர்கள் நீர் தேங்கியுள்ளது, நுழைவாயில் 500 மீட்டர்கள் அகலமானது.[1]
Remove ads
துறைமுக வசதிகள்
திருகோணமலைத் துறைமுகம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். மே நாளில் பூட்டப்பட்டிருக்கும்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads