தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர்
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு புத்த விகாரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னிந்திய புத்தர் கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையிலுள்ள பெரம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு புத்த விகாரம் ஆகும்.[1][2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 29.9 மீ. உயரத்தில், (13.110315°N 80.241668°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரம்பூர் பகுதியில் இப்புத்த விகாரம் அமைந்துள்ளது.
விபரங்கள்
2018 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் நாள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த புத்த விகாரம் திறக்கப்பட்டது. பர்மா, கம்போடியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்த புத்த பிக்குகள் மற்றும் தென்னிந்திய புத்தர் சங்கம் சார்பில் கலந்து கொண்டவர்களால் இந்த புத்தர் கோயில் துவக்கி வைக்கப்பட்டது. சுமார் 6 அடி உயரமுள்ள தியான நிலையில் அமர்ந்து காணப்படும் புத்தர் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புத்தர் போதனைகளைப் பரப்பி சீர்திருத்தம் செய்வதே இங்குள்ள புத்த பிக்குகளின் நோக்கமாகும்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
