தேசபந்து பெண்களுக்கான கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசபந்து மகளிர் கல்லூரி என்பது தெற்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். [1] 1950 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டாலும் இக்கல்லூரி, 1955 ஆம் ஆண்டில்தான் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்ததன் வழி முறையான அங்கீகாரம் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இக்கல்லூரி 65 ஆவது நிறுவனநாளைக் கொண்டாடியுள்ளது.[2]
பட்டப்படிப்பைத் தவிர, பெண் மாணவிகளின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்ப்பதிலும் இக்கல்லூரி சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதற்காகவே கலாச்சார விழாக்கள், விளையாட்டுக்கள், கல்வி கருத்தரங்குகள், பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி, பெண்கள் தற்காப்பு படிப்புகள் (சுகன்யா கொல்கத்தா போலீஸ் முன்முயற்சியின் கீழ்) மற்றும் பிற மாணவர் நடவடிக்கைகள் (நாடக கிளப், புகைப்பட கிளப், சினி கிளப் போன்றவை) கல்வி அமர்வுகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
Remove ads
படிப்புகள்
இக்கல்லூரி இளங்கலை (பி. ஏ.) பட்டப்படிப்பை வழங்குகிறது. (பி.எஸ்.சி / பி.காம்.)[3]
- பெங்காலி,
- ஆங்கிலம்,
- புவியியல்,
- வரலாறு,
- பொருளாதாரம்,
- தத்துவம்,
- சமஸ்கிருதம் மற்றும்
- கல்வி கணக்கியல் ஆகியவற்றில் பாடங்கள். [4]
- 2003-2004 இலிருந்து (மேலாண்மை)பிபிஏ பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads