தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனம் (National Institute of Science Communication and Information Resources) இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள அரசுசார் நிறுவனம் ஆகும். இது இந்தியாவில் 2002-ல் நிறுவப்பட்ட தகவல் அறிவியல் தொடர்பான நிறுவனம் ஆகும். 2021ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஆனது.[1] இது இந்தியாவில் உள்ள 38 ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிறுவனம் அறிவியல் தொடர்பான பல ஆய்வு இதழ்கள் மற்றும் இதழ்களை வெளியிடுகிறது.[2][3]

Remove ads

வரலாறு

2002-ல், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் 1952-ல் தொடங்கப்பட்ட இந்திய அறிவியல் ஆவண மையம் தேசிய அறிவியல் தொடர்பு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனமாக உருவாகியது.

பொதுச் சேவைகள்

  • மின் பதிப்பகம்
  • தொகுத்தல்
  • அட்டவணைப்படுத்துதல்
  • அச்சு & தயாரிப்பு
  • உலர்தாவர தயாரிப்பு நுட்பங்கள்
  • தாவர வகைப்பாட்டியல் மற்றும் அடையாளம் காணல்
  • கச்சா தாவரங்கள் சார்ந்த தயாரிப்புகளை அடையாளம் காணுதல்
  • உள்ளடக்கங்கள், சுருக்கங்கள் மற்றும் புகைப்பட நகல் சேவை (CAPS)
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற அறிவு நுழைவாயில்
  • ஆவண நகல் விநியோக சேவைகள்
  • ஆய்வுக்கட்டுரைகள் தேடல் சேவைகள்
  • பன்னாட்டுத் தர தொடர் எண்
  • அறிவியல் தொடர்பு, எண்ணிம நூலகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நூலக தானியக்கம் போன்றவற்றில் குறுகிய கால படிப்புகள்.
  • மொழிபெயர்ப்பு சேவைகள்
  • பயிற்சி திட்டங்கள்
Remove ads

தேசிய அறிவியல் நூலகப் பொதுச்சேவைகள்

  • வாசகர் சேவை
  • தொழில்நுட்ப விசாரணை சேவை
  • நகலாக்கச் சேவை
  • நூலக இடையிலான புத்தக கடன் சேவை
  • மின்னாய்விதழ் கட்டணமில்லா அணுகல்
  • தேசிய அறிவியல் எண்ணிம நூலகம் nsdl
  • பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம்

திறந்த அணுகல்

இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் 18 ஆய்விதழ்கள் மற்றும் 3 பிரபலமான அறிவியல் இதழ்கள் (சயின்சு ரிப்போர்ட்டர் மற்றும் இதன் இந்தி மற்றும் உருது பதிப்புகள்) இணைய வெளியீடுகள் களஞ்சிய இணையதளத்தில் திறந்த அணுகலாகக் கிடைக்கின்றது.

ஆய்விதழ்கள்

  • நூலகம் மற்றும் தகவல் ஆய்வுகள் ஆய்விதழ் (ALIS)
  • புதுமையான பயன்பாட்டு ஆராய்ச்சி ஆய்விதழ்
  • பாரதிய வைஞானிக் ஏவம் ஆடியோகிக் அனுசந்தன் பத்திரிகை
  • இந்திய உயிர்வேதியியல் மற்றும் உயிர்இயற்பியல் இந்திய ஆய்விதழ் (IJBB)
  • இந்திய உயிர்தொழில்நுட்பவியல் ஆய்விதழ் (IJBT)
  • இந்திய வேதியியல் ஆய்விதழ், பிரிவு A (IJCA)
  • இந்திய வேதியியல் ஆய்விதழ், பிரிவு B (IJCB)
  • இந்திய வேதியியல் தொழில்நுட்ப ஆய்விதழ் (IJCT)
  • இந்திய உயிரியல் பரிசோதனை ஆய்விதழ் (IJEB)
  • இந்தியப் பொறியியல் மற்றும் பொருளறிவியல் ஆய்விதழ் (IJEMS)
  • இந்திய இழை மற்றும் நூல்நுட்ப ஆய்விதழ் (IJFTR)
  • இந்தியப் புவி-சமுத்திரவியல் ஆய்விதழ் (IJMS)
    • முன்னர் இந்திய சமுத்திரவியல் ஆய்விதழ்
  • இந்திய இயற்கைப் பொருட்கள் மற்றும் மூலங்கள் ஆய்விதழ் (IJNPR)
  • இந்திய இயற்பியல் மற்றும் பயன்பாட்டு இயற்பியல் ஆய்விதழ் (IJPAP)
  • 'வானொலி & விண்வெளி இயற்பியல் ஆய்விதழ்' (IJRSP)
  • பாரம்பரிய அறிவுக்கான இந்திய ஆய்விதழ் (IJTK)
  • அறிவுசார் சொத்து உரிமைகள் ஆய்விதழ் (JIPR)
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆய்விதழ் (JSIR)
  • அறிவியல் ஈடுபாட்டு ஆய்விதழ் (JST)

அறிவியல் இதழ்கள்

களஞ்சியம்

  • இயற்கை பொருட்கள் களஞ்சியம் (NPARR)
Remove ads

தகவல் அறிவியலில் இணைநிதி

இந்நிறுவனம் தகவல் அறிவியலில் இணைநிதியினை இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பு அளவிலான படிப்பிற்கு வழங்குகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads