தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா

இந்தோனேசிய அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தாmap
Remove ads

தேசிய ஆவணக் காப்பக கட்டிடம், ஜகார்த்தா (National Archives Building, Jakarta) ( Indonesian: Gedung Arsip Nasional) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கவர்னர் ஜெனரல் ரெய்னியர் டி கிளெர்க்கின் தனியார் இல்லமாக இது இருந்தது. அப்போது இந்தக் கட்டிடம் ஜகார்த்தாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது. இந்த வீடு ஆரம்ப காலத்தில் ஒரு பழமையான லந்தூயிஸ் எனப்படுகின்ற டச்சுக்காலனிய நாட்டுப்புறப்பாணியில் அமைந்த வீடாகும்.

விரைவான உண்மைகள் தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா, பொதுவான தகவல்கள் ...
Remove ads

வரலாறு

Thumb
1930 களில் கட்டிடம்

மூலென்வ்லிட் பகுதியின் மேற்குப் புறத்தின் அமைந்திருந்த ரெய்னியர் டெ கிளார்க்கின் லந்தூயிஸ் வீட்டின் (டச்சு "நாட்டின் வீடு") வரலாறானது 1755 ஆம் ஆண்டு அதற்கான நிலம் வாங்குயதில் இருந்து தொடங்கியது. 1777 ஆம் ஆண்டில் டச்சு கிழந்திந்தியாவின் கவர்னர் ஜெனரலாக டி கிளார்க் நியமிக்கப்பட்டார். [3] இந்த நியமனம் குறித்து அவர் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை. அதற்கு அவர் காரணம் அந்த நியமானது "இறைச்சி சாப்பிட்ட பிறகு கடுகினை சாப்பாட்டில் வைப்பது" என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

அந்தக் காலகட்டத்தில் இருந்த பெரும்பாலான அரசாங்க அதிகாரிகளைப் போலல்லாமல், டி கிளெர்க் ஊழல் அற்றவர் என்ற நற்பெயரினைக் கொண்டிருந்தார், மேலும் அவர் படேவியாவைச் சேர்ந்த மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த சோபியா ஃபிரான்சினா வெஸ்ட்பாம் என்பவரை மணந்ததால் அவர் ஊழலில் ஈடுபட தேவை எழவில்லை. சோபியா மைக்கேல் வெஸ்ட்பாம் மற்றும் கெர்ட்ருய்டா மார்கரெதா கூசன்ஸ் ஆகியோரின் மகள் ஆவார். கூசென்ஸ் அவருடைய அழகுக்காக அறியப்பட்டவார். அதனால் அவர் மூன்று முறை பணக்காரக் கணவர்களுடன் திருமணம் செய்து கொண்டார். அப்போது சேர்ந்திருந்த செல்வத்திற்கு சோபியா மட்டுமே வாரிசாக இருந்தார், இதனால் டி கிளெர்க்கிற்கு ஒரு பெரிய நாட்டு வீடு கட்ட வாய்ப்பு கிட்டியது. [4]

அவர் முதன்முதலாக வாங்கிய நிலம் மேற்கில் க்ருகுட் நதியை நோக்கியும், கிழக்கே மோலன்வ்லீட்டின் டைக் மற்றும் தெற்கே கம்புங் பாலி ஆகியவற்றையும் கொண்டு அமைந்திருந்தது. நிலம் வாங்கியவுடன் வீட்டைக் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [1] டச்சு அல்லாதவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மற்றும் அடிமைகள் உட்பட பலரை வேலைக்கு அமர்த்தி டி கிளார்க் தனது புதிய எஸ்டேட்டை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டார். டி கிளார்க் இறக்கும் போது அந்த எஸ்டேட் எனப்படுகின்ற வீடு இரு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. கழுவுவதற்கான வசதி கொண்ட வீடு, ஒரு கிடங்கு, அடிமை குடியிருப்பு, ஒரு சமையலறை, தொழுவங்கள், வண்டி வீடுகள், பயிற்சியாளர்கள் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகள், பின்புறத்தில் பல அறைகளைக் கொண்ட கட்டடம் ஆகியவை இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட அடிமைகள் மாளிகையில் வேலை செய்து கொண்டு அங்கு தங்கி இருந்தனர். அவர்களில் பதினாறு பேர் தங்கள் எஜமானரையும் விருந்தினர்களையும் இரவில் மகிழ்விக்க இசைக் குழுவை உருவாக்கி இருந்ததனர்.

இந்த வீடு பின்னர் அவருடைய முந்தைய திருமணம் மூலமாக சோபியாவின் மகனான ஃபிராங்கோயிஸ் ஆர். ரேடர்மேக்கரிடம் சென்றது. [5]

1785 ஆம் ஆண்டின் சோபியாவின் கடைசி உயிலின்படி, 50 க்கும் மேற்பட்ட அடிமைகள் விடுவிக்கப்பட்டதோடு அவர்கள் சுதந்திரமாக இருப்பதற்காக சிறிது பணம் வழங்கப்பட்டது. மற்ற அடிமைகளும் விடுதலையைப் பெற்றனர். மீதமுள்ள அடிமைகள், சுமார் நூறு பேர், அவரவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் 1786 ஜனவரி 28 அன்று டி கிளார்க்கின் வீட்டின் முன்பாக ஏலம் விடப்பட்டனர். அதே ஆண்டில், ரேடர்மேக்கர் இந்த சொத்தை இந்திய கவுன்சிலின் மற்றொரு உறுப்பினரான ஜோஹன்னஸ் சைபர்க்கிற்கு விற்றார் . [5]

சைபர்க் இறுதியில் 1801 மற்றும் 1805 க்கு இடையில் கவர்னர் ஜெனரலாக ஆனார். தொடர்ந்து அவர் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் (1808-1816) அவர் அந்த வீட்டில் தங்கினார். 1817 இல் சைபர்க் இறந்த பிறகு, அந்த வீடு அவரது விதவையால் ஏலம் விடப்பட்டது. 1818 ஆம் ஆண்டில் லம்பேர்ட் ஜெகர்ஸ் வீக்கென்ஸால் வாங்கப்பட்டது. [6] [5]

1819 ஆம் ஆண்டில், வீக்கன்ஸ் வீட்டை மீண்டும் விற்றார். படேவியாவின் எஸ்டேட் லீண்டர்ட் மிரோவால் வாங்கப்பட்டது. 1755 ஆம் ஆண்டில் க்ரோட்காவில் பிறந்த மியோரோ, டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் (விஓசி) பணியாற்றுவதற்காக 1775 ஆம் ஆண்டில் படேவியா வந்தார். அவர் ஒரு போலந்து யூதராவார். அவருடைய உண்மையான பெயர் யோஹீட் லீப் ஜெகியேல் இகல் என்பதாகும்.[7] டச்சு கிழக்கிந்திய கம்பெனி யூதர்கள் படேவியாவில் உள்ள புதிய தலைமையகத்திற்கு பயணிப்பதை தடைசெய்த காரணத்தால் அவர் தனது உண்மையான பெயரை மறைத்திருந்தார். 1777 ஆம் ஆண்டில், மாளிகையில் இகெல், டி கிளெர்க்கிடம் வந்து சேர்ந்தார். அங்கு பாதுகாப்பு காவலராக பணியாற்றினார். [1] [8] அப்போது பணி நேரத்தில் இகல் தூங்கியதாகவும், எதிர்பாராமல் திரும்பி வந்த டி கிளார்க் அவருடைய சோம்பேறித்தனத்திற்காக அவருக்கு 50 கசையடிகள் அடித்ததாகவும் கூறுவர்.அப்போதே அவர் ஒரு நாள் அந்த எஸ்டேட்டை எப்படியும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளப்போவதாக முடிவு செய்தார். இகெல் தன்னுடைய இராணுவ சேவையை முடித்த பின்னர் தனது பெயரை லீண்டர்ட் மியரோ என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ஒரு பொற்கொல்லராக பணியாற்றத் தொடங்கினார். கல்வியறிவற்றவராக இருந்தபோதிலும், அவரால் ஓரளவிற்கு சம்பாதிக்க முடிந்தது. பின்னர் பாண்டோக் கெடேயின் தோட்டத்தை வாங்கினார். 1782 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி யூதர்களை சேர்க்க ஒப்புக்கொண்டபோது மியெரோ தனது சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தினார். கடைசியாக வீட்டை வாங்கி விழா நடத்தினார். [1] மியரோவிற்கு சட்டரீதியாக இரு மனைவிகள் இருந்தனர்.அவர்களுக்கு குழந்தை இல்லாததால், நான்கு வெவ்வேறு அடிமைகளால் தனக்கு பிறந்தகுழந்தைகளை அவர் தத்தெடுத்துக் கொண்டார். [5]

மே 10, 1834 ஆம் நாளன்று மியரோ இறந்ததைத் தொடர்ந்து, [5] 1844 ஆம் ஆண்டில் டச்சு சீர்திருத்த தேவாலயத்தின் டீக்கன்ஸ் கல்லூரிக்கு மீண்டும் விற்பனை செய்யப்படும் வரை லீண்டெர்ட்டின் வாரிசுகள் இந்த வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் 1900 வரை அனாதை இல்லமாக செயல்பட்டது.முன் முகப்பில் கிரேக்க பாணி தேவாலயத்தை சேர்ப்பது போன்ற பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1901 ஆம் ஆண்டில், காலனித்துவ அரசாங்கம் இந்த கட்டிடத்தை கையகப்படுத்தி, அதனை சுரங்கத் துறையின் அலுவலகமாக மாற்றியது. பின்னர் டி கிளார்க்கின் மாளிகையின் உண்மையான முகப்பை பழைய நிலையில் திருப்பி அமைப்பதற்காக கிரேக்க பாணி தேவாலயம் இடிக்கப்பட்டது. [5]

1925 ஆம் ஆண்டில், பெரிய மறுசீரமைப்பு நடைபெற்றது. பின் இக்கட்டிடம் மாநில காப்பகமாக செயல்பட ஆரம்பித்தது.இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இது ஓர் ஆவணக்காப்பகக் கட்டிடமானது. [5]

1974 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் தேசிய ஆவணக்காப்பகம் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஜலான் ஆம்பேரா செலட்டானுக்கு மாற்றப்பட்டது, பழைய கட்டிடம் காப்பகங்களுக்கு பொருத்தமாக அமையவில்லை என்று கருதப்பட்டது. 1979 இல் இடமாற்றம் முடிந்ததும், வீட்டின் நிலை மோசமடைந்தது. [5]

1995 ஆம் ஆண்டில், ஜகார்த்தாவை தளமாகக் கொண்ட சில டச்சு நிறுவனங்கள் இந்தோனேசியா அறக்கட்டளை பரிசு என்ற ஒரு பரிசினை நிறுவி, இந்தோனேசிய சுதந்திரத்தின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாளிகையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பணத்தை சேகரிக்க ஆரம்பித்தன. ராணி பீட்ரிக்ஸின் வருகையின் போது, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேறகொள்ளப்பட்டது. இந்தோனேசியாவின் தேசிய ஆவணக்காப்பகம் எந்தவொரு திட்டங்களையும் முன்வைக்கா நிலையில், சேதத்தைத் தடுக்க, 1997 ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு ஆரம்பமானது. நவம்பர் 1, 1998 ஆம் நாளன்று, மறுசீரமைப்புப் பணி முடிவுற்றது. [5]

அதே ஆண்டில், மே 13 ஆம் நாளன்று அன்று, நாட்டில்கலவரம் வெடித்தது. தேசிய காப்பக கட்டிடத்திற்கு அடுத்ததாக அமைந்திருந்த ஒரு வங்கி கட்டிடம் எரிக்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள தேசிய காப்பக கட்டிடத்தில் தஞ்சம் புகுந்தனர். கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றபோது, கட்டிடத்தின் மறுசீரமைப்பிற்காக தளத்தில் பணியாற்றி வந்த சுமார் 80 தொழிலாளர்கள் அவர்களை விரட்டியடித்தனர்.[9]

Remove ads

சேகரிப்புகள்

இந்த கட்டிடத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் (விஓசி) பல வரலாற்று காலப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையும் அடங்கும்.

முதல் தளத்தில் 1541 ஆம் ஆண்டிலிருந்து உள்ள வரைபடங்கள் காட்சிக்கு உள்ளன. டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திய சாப்பாட்டு நாற்காலிகள் மற்றும் ஒரு டைனிங் டேபிள் அங்கு உள்ளன.

குறிப்புகள்

மேற்கோள் நூல்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads