தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகம் (யப்பான்)

யப்பானில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் ஆய்வுக் கழகம் From Wikipedia, the free encyclopedia

தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகம் (யப்பான்)
Remove ads

தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகம் ( National Museum of Ethnology) என்பது யப்பானில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். [1] இது 1974 இல் நிறுவப்பட்டு 1977 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இது மனுடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்வித் துறைகளில் யப்பானின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது. இது ஒசாகாவின் சூட்டாவில் எக்ஸ்போ '70 நடந்த மைதானத்தில் கட்டப்பட்டது. இது நிறுவப்பட்டபோது இருந்த சேகரிப்புகள் அட்டிக் சேகரிப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் யப்பானிய பொருட்களின் இன ஒப்பாய்வியல் தொகுப்பாகும். இதில் ஜோமோன் தொல்லியல் கலைப்பொருட்களின் சில ஆரம்ப கண்டுபிடிப்புகள் (மோர்ஸ் சேகரிப்பு) அடங்கும். 1977 ஆம் ஆண்டு திறப்பு விழாவிற்காக மேலும் சேகரிப்புகள் சேகரிக்கபட்டன. மேலும் சேகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

இங்கு படச்சுருள், நிலைப்படங்கள், ஒலிப்பதிவுகள், அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கும் பொருட்கள், வேளாண் முதல் உணவு, நகர்ப்புற வாழ்க்கை, நாட்டுப்புற கைவினைப்பொருட்கள், சமயம் சார்ந்த பொருட்களை சேகரிக்க கவனம் செலுத்தபடுகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்து சேகரிக்கபட்ட முழு சேகரிப்பின் ஒரு பகுதியை மட்டுமே நிரந்தர காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இளவேணிற் காலத்திலும் இலையுதிர்காலத்திலும் சுமார் மூன்று மாத கால இரண்டு சிறப்பு கண்காட்சிகள் நடத்தபடுகின்றன. மேலும் சிறப்பு கருப்பொருள்களில் பல சிறிய தற்காலிக கண்காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் ஏறக்குறைய 70 ஆராய்ச்சிப் பணியாளர்கள் உள்ளனர். மேலும் இங்கு யப்பான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அறிஞர்களின் வருகை தீவிரமாக ஆதரிக்கப்படுறது. இங்கு யப்பானியம், ஆங்கிலம், சீனம், எசுபானியம் மற்றும் பிற மொழிகளில் புத்தகங்கள் மற்றும் இதழ்கள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ள யப்பானின் மிகப்பெரிய கல்வியியல், பல மொழி குறிப்பு நூலகங்கள் கொண்ட அருங்காட்சியக நூலகம் உள்ளது. பொது பல்கலைக்கழக நூலகங்களின் தேசிய வலையமைப்புடன் இந்த நூலகம் இணைக்கப்பட்டுள்ளது.

யப்பான் முழுவதும் உள்ள பொது ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள மாணவர்களுக்கு நிர்வாகத்தை வழங்கும் நிறுவனங்களுக்கு இடையேயான அமைப்பான, ஜப்பானின் இன்டர்-யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்டு கிராஜுவேட் ஸ்டடீஸ் ( Sōkendai ) அமைப்பு இந்த அருங்காட்சியகத்துடன் இணைந்து முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளை வழங்குகிறது. .

தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகம் யப்பானில் உள்ள தேசிய மானுடவியல் கழகத்தின் (NIHU) நிறுவன உறுப்பினராகவும் உள்ளது.

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads