தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (National Board of Examinations (NBE) இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இது 1975-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. இந்த வாரியத்தின் முதன்மைப் பணி இந்திய மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்புவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதே ஆகும்.[1][2][3][4]* இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்களுக்கு டிஎன்பி {DNB) எனும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்க்கான டிப்ளமேட் நேசனல் போர்டு தேர்வுகள் நடத்துகிறது.
Remove ads
நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்வுகள்
தேசிய மருத்துத் தேர்வுகள் வாரியத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்வுகள்:
- நீட் தேர்வு (முதுநிலை மருத்துவம்)[5]
- நீட் தேர்வு (முதுநிலை பல் மருத்துவம்) (NEET-MDS)[6]
- நீட் தேர்வு (அதியுயர் மருத்துவம்) (NEET-SS) - DM/ Mch/DNB போன்ற அதியுயர் சிறப்பு (superspecialty) மருத்துப் படிப்புகளுக்கான தேர்வு superspecialty [7]
- வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவப் பணி செய்ய விரும்புபவர்களுக்கு தகுதித் தேர்வு (FMGE) நடத்துதல்.
- இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்களுக்கு டிஎன்பி {DNB) எனும் முதுநிலை மருத்துவப் படிப்பு (டிப்ளமேட் நேசனல் போர்டு) படிப்பவர்களுக்கு தேர்வுகள் நடத்துகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads