தேசிய வேதியியல் ஆய்வகம்

From Wikipedia, the free encyclopedia

தேசிய வேதியியல் ஆய்வகம்map
Remove ads

தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory (NCL) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு பிரிவாக 1950-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ஏறத்தாழ 200 வேதியல் ஆய்வாளர்கள் பணி செய்கின்றனர். இந்த வேதியல் ஆய்வகம் பாலிமர் அறிவியல், கரிம வேதியியல், வினையூக்கம், பொருட்கள் வேதியியல், வேதியியல் பொறியியல், உயிர்வேதியியல் அறிவியல் மற்றும் வேதியியல் செயல்முறை மேம்பாடு ஆகியவற்றில் புலமைப் பெற்றது. அளவீட்டு அறிவியல் மற்றும் வேதியியல் தகவல்களுக்கு இது நல்ல உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, ஆய்வுப் பகுதி ...
Thumb
தேசிய வேதியல் ஆய்வகம், புனே

இந்த ஆய்வகத்தில் 400 மாணவர்கள் வேதியியல் துறையில் உயர் படிப்பு படிக்கின்றனர். மேலும் இந்த ஆய்வகம் ஆண்டுதோறும் 50 ஆய்வு மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது.

தேசிய வேதியியல் ஆய்வகம் ஆண்டுதோறும் 400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறது. மேலும் இந்த ஆய்வகம் 60 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.[1]

Remove ads

வேதியியல் ஆய்வுக் குழுக்கள்

  • வினையூக்கம்
  • வேதியியல் உயிரியல் & உயிரியல் வேதியியல்
  • வேதியியல் பொறியியல் அறிவியல்
  • கூட்டமைப்பு திரவவியல் & பலபடி பொறியியல்
  • பன்முகத்தன்மை மற்றும் ஒரே மாதிரியான வினையூக்கம்
  • தொழில்துறை ஓட்ட மாதிரி
  • பொருட்கள் வேதியியல்
  • நானோ பொருட்கள் அறிவியல் & தொழில்நுட்பம்
  • கரிம வேதியியல்
  • தாவரத்திசு வளர்ப்பு
  • பலபடி வேதியியல் & பொருட்கள்
  • செயல்முறை வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
  • நொதியியல் மற்றும் நுண்ணுயிரியல்
  • வினையூக்கி உலைகள் மற்றும் பிரித்தல்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads