தேவர்கண்டநல்லூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவர்கண்டநல்லூர் (Devarkandanallur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் தாலுகாவில் கொரடாச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். ஆகும்.
Remove ads
மக்கள்தொகை
2001 ஆம் மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவர்கண்டநல்லூர் மக்கள் தொகை 1,844 ஆகும். இதில் 879 ஆண்கள் மற்றும் 965 பெண்கள் இருந்தனர். பாலின விகிதம் 1098 ஆகவும் கல்வியறிவு விகிதம் 76.28 ஆகவும் இருந்தது. இவ்வூர் திருவாரூர் மற்றும் மன்னார்குடியை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் குளிகரை ஆகும். இது திருவாரூர்-தஞ்சை வழித்தடத்தின் கீழ் வருகிறது. பயணிகள் ரயில்கள் மட்டுமே குளிகரையில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திருவாரூர் மற்றும் மன்னார்குடியிலிருந்து இந்த ஊருக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
Remove ads
தொழில்கள்
இந்த ஊரில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனர். மேலும் சிறு தொழில்கள் செய்து வருகின்றனர்.
இவ்வூரில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.[1]
இவ்வூரில் மதுபான கடை இருந்து வந்தது. மதுபான கடை மூட கோரி போராட்டம் நடத்தியதால் பெண்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads