தொடக்கம்
2008 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொடக்கம் (Thodakkam) என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் திகில் திரைப்படம் ஆகும். இப்படத்தை முத்துகுமார் இயக்க இரகுவண்ணன் மற்றும் மோனிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிதுள்ளனர். படம் வெளியிடுவதற்கு முன்பு படத்தின் பெயர் ஆரம்பம் என்று அறியப்பட்டது. படம் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானது, இப்படம் ஒரு தோல்விப் படமாக ஆனது.[1]
Remove ads
கதை
வாஞ்சிநாதன் (ரகுவண்ணன்), காயத்ரி (மோனிகா), சிண்டோ (அபினாய்), ஹபீப் (ரிஷி), நான்சி (மேகா நாயர்) ஆகியோர் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இப்போது பட்டதாரிகளாக உள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேட திட்டமிட்டுள்ளனர். இதற்கான நாள் வந்துவிட்டது, ஆனால் ஒரு பெரிய சதித்திட்டத்தினால் அவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.[சான்று தேவை]
நடிகர்கள்
- இரகுவண்ணன்
- மோனிகா
- அபிநய்
- ரிஷி
- ரகுவரன்
- சுபைர் மொகமத் ரிகாஸ்
இசைப்பதிவு
இப்படத்திற்கு ஜெரோம் புஷ்பராஜ் இசையமைத்தார்.[2]
- "யார் யாரோ" - கௌதம், மாயா
- "ஆதாமின் ஆப்பிள்" - ரஞ்சனி-காயத்ரி, சத்யன்
- "போன் போட்டு" - கானா பாலா
- "எதுதான் முடியாது" - ரகுவரன்
- "வா நண்பா" - விஜய் யேசுதாஸ்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads