தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, அயனாவரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை என்பது தமிழ்நாடு மாநிலத்தில்[2] சென்னை[3] மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில்[4] அமையப் பெற்றுள்ள ஓர் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஆகும்.

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூறுகள் ...

மாத ஊதியம் ரூ.15,000க்கும் குறைவாகப் பெறும் நிறுவன ஊழியர்கள் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறத் தகுதியுடையவர்கள்.[5] சென்னையிலுள்ள இரண்டு அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் ஒன்று அயனாவரம் பகுதியில் இயங்குகிறது. மற்றொன்று கே. கே. நகர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[6][7]

Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.8 மீட்டர்கள் (104 அடி) உயரத்தில், (13.0949°N 80.2391°E / 13.0949; 80.2391) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அயனாவரம் பகுதியில் மேடவாக்கம் குளச் சாலையில்[8] இம்மருத்துவமனை அமைந்துள்ளது.

விபரங்கள்

இருதய சிகிச்சை, நரம்பியல், மகப்பேறு மருத்துவம், எலும்பியல், காது மூக்கு தொண்டை நிபுணத்துவம், கண் மருத்துவம், உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை இம்மருத்துவமனையின் சிறப்பு அம்சங்களாகும். இரத்த வங்கி சேவைகளும் இங்கு உண்டு. இம்மருத்துவமனையின் கீழ் தளத்தில் மருந்துகள் வழங்கும் பகுதி உள்ளது. குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் வெளி நோயாளிகள் பிரிவும் இங்கு இயங்குகிறது.

பல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவத் துறையும் இங்கு உள்ளது.[9]

Remove ads

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads