நஞ்சுபுரம்

2011 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நஞ்சுபுரம் (Nanjupuram) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் 2011 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. இத்திரைப்படம் புனைவு கதாபாத்திரங்கள் மற்றும் பரபரப்பூட்டும் கதையைக் கொண்டது ஆகும். இத்திரைப்படத்தை சார்லசு இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சார்லஸ் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ராகவ் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] இத்திரைப்படத்திற்கு ராகவ் இசையமைத்துள்ளார். அவரது மனைவி பிரீதா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படமானது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்துள்ளது. இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 ஆம் நாள் திரைக்கு வந்தது.[3]

விரைவான உண்மைகள் நஞ்சுபுரம், இயக்கம் ...
Remove ads

கதைக்களம்

நஞ்சுபுரம் ஒரு நச்சுத்தன்மையுள்ள பாம்புகள் நிறைந்த குன்றுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம் ஆகும். அந்த கிராமத்தில் இரண்டு பெரிய மனிதர்கள் உள்ளனர். அதில் ஒருவர் கிராமத்தின் தலைவர்(தம்பி ராமையா), மற்றொருவர் வேலு என்ற நல்ல மகனைப் பெற்றெடுத்த நபர் ஆவார். கிராமத் தலைவர் மலரின் (மோனிகா) தாயாருடன் உறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக மலரின் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்து செல்வார்.

ஒரு நாள், கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதற்காக வேலு மலையின் மற்றொருபுறத்திற்கு பாம்புகளின் குறுக்காகக் கடந்து எடுத்துச் செல்கிறார். மலர் அவருடன் செல்கிறாள். சிகிச்சை நல்லபடியாக முடிகிறது. மலரும் வேலுவும் காதலிக்கத் தொடங்குகி்றனர். ஒரு நாள், மலர் தனது தோழிகளுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவளைத் தீண்ட வருகிறது. அந்த நேரத்தில் வேலு அந்த இடத்திற்கு வந்து பாம்பினை அடிக்கிறார். அந்தப் பாம்பிற்கு கழுத்துப் பகுதியில் பலமாக அடிபட்டு அங்கிருந்து ஊர்ந்து சென்று விடுகிறது. வேலுவின் பெற்றோர்களுக்கும் மற்றோரையும் இது பயத்தில் ஆழ்த்தி விடுகிறது. அடிபட்ட பாம்பானது தன்னைத் தாக்கியவரை 40 நாட்களுக்குள் பழி தீர்க்கும் என்பதால் அவர்கள் அச்சமுறத் தொடங்குகின்றனர். வேலுவிற்கு 30 அடி உயரத்தில் ஒரு குடிசையைக் கட்டிக் கொடுத்து அதில் தங்கச் சொல்கின்றனர். அந்தப் பகுதியில் கீழேயும் பள்ளம் தோண்டி விடுகின்றனர். ஆனால், காவலுக்கு இருப்பவர்கள் தூங்கிய பின்னர், வேலு அந்தக்குடிசையில் இருந்து இறங்கி ஆற்றுப்பகுதிக்கு இரவு நேரத்தில் சென்று மலரைச் சந்திக்கிறான்.

ஒரு நாள், வேலுவின் தந்தையார் இதைப் பார்த்து ஊர்த்தலைவரிடம் மலரை எச்சரிக்குமாறு சொல்கிறார். ஊர்த்தலைவர் மலரின் வீட்டிற்குச் சென்று மலரை அச்சுறுத்துகிறார். மேலும், மலரின் அம்மாவிடம் மலருக்கு மாப்பிள்ளை பார்க்குமாறும் கூறுகிறார். அவர்கள் மலருக்குத் திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். மலர் வருத்தமடைகிறாள். இதற்கிடையில், வேலு ஏற்கெனவே அடிபட்ட பாம்பின் அச்சுறுத்தலால் மலரைச் சந்திக்கச் செல்வதைத் தவிர்த்து வருகிறான். ஒரு நாள், மலரின் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு வேலுவின் நண்பனிடம்(திருடன்) வேலுவை தன்னை வந்து சந்திக்குமாறு மலர் கூறி அனுப்புகிறாள். வேலுவின் நண்பன் வேலுவிடம் இந்தத் தகவலைத் தெரிவிப்பதோடு வேலுவின் காவலுக்கு இருப்பவர்களின் கவனத்தை திசைதிருப்ப அவர்கள் அவனைப் பின்தொடருமாறு செய்கிறான். வேலு மனதைத் திடப்படுத்திக் கொண்டு மலரை சந்திக்கச் செல்கிறான். வேலுவும், மலரும் கிராமத்தை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

அப்பொழுது தான், பழிவாங்கத் துடிக்கும் பாம்பு, அவர்களைத் துரத்துகிறது. கிராமத்தார்கள் வேலுவும், மலரும் தப்பிவிட்டதை அறிந்து அவர்களை கிராமத்தைச் சுற்றியும் தேடுகிறார்கள். பாம்பு வேலுவைக் கொல்ல வரும் போது 40 ஆவது நாள் முடிவுக்கு வந்து அடுத்த நாளின் சூரிய உதயம் தொடங்கி விடுகிறது. பாம்பு வந்த வழியே திரும்பி விடுகிறது. துரதிருஷ்ட வசமாக, கிராமத் தலைவரும் அவரது அடியாட்களும் மலரைக் கண்டுபிடித்துக் கொல்ல வருகின்றனர். வேலு மலரைக் காப்பாற்றி தான் உயிர் விடுகிறான். மலர் வேலுவின் மகனைச் சுமந்து பெற்றெடுக்கிறாள். திரைப்படம் வேலுவின் மகன் தன் தந்தையைப் போல பாம்புகளிடம் பயமின்றி விளையாடுவதான காட்சியுடன் முடிகிறது.

Remove ads

நடிப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads